(எம்.மனோசித்ரா)
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலையின் Y.O. சிறைக்கூடத்திற்கு மாற்றப்பட்ட 150க்கும் மேற்பட்ட கைதிகள் மீது திட்டமிட்ட முறையில் கொடூரமான சித்திரவதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட கைதிகளை நேரில் சந்தித்து சட்ட உதவிகளை வழங்கச் சென்ற சட்டத்தரணிகள் அச்சுறுத்தப்பட்டு, அவர்களுக்கான சட்டபூர்வ உரிமைகளும் சிறை நிர்வாகத்தினால் அப்பட்டமாக மறுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாகக் கைதிகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அவசர நிலைமை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகளுடன் கலந்தாலோசிப்பதற்காகச் சென்ற சட்டக் குழுவினர், அங்குள்ள கைதிகள் பலரின் கைகளில் கடுமையான உடல் காயங்கள் இருப்பதையும், அவர்கள் தாங்க முடியாத வலியினால் நடக்க முடியாமல் தவிப்பதையும் நேரில் அவதானித்துள்ளனர்.
எனினும், இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சிறைக்காவலர்கள், சட்டத்தரணிகள் தங்களது சேவை பெறுநர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடுவதைத் தடுத்து அச்சுறுத்தியுள்ளனர். இந்த அச்சுறுத்தல் காரணமாகத் தாங்கள் அனுபவித்த கொடூரங்களை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் கைதிகள் தடுக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்துச் சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ புகாரை ஏற்கவும் சிறைச்சாலை அத்தியட்சகர் மறுத்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளால் ஆத்திரமடைந்த சிறைக்காவலர்கள், கைதிகள் மீது பழிவாங்கும் நோக்கில் காலை, மதியம், இரவு என ஒரு நாளைக்கு மூன்று முறை திட்டமிட்ட முறையில் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த வன்முறையால் பெருமளவிலான கைதிகள் பலத்த காயமடைந்து, நிற்கவோ அல்லது நடக்கவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மறுபுறம், இந்தத் துஷ்பிரயோகங்களை மூடிமறைப்பதற்காகச் சிறைச்சாலை திணைக்களம் கடுமையான தகவல் இருட்டடிப்பை மேற்கொண்டு வருகிறது. தங்களது உறவினர்களின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து அறியாது தவிக்கும் குடும்பத்தினருக்கு அவர்களைச் சந்திப்பதற்கான அனுமதியும் முற்றாக மறுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கொடூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக நீதிவான் நீதிமன்றமும் நீதித்துறையும் உடனடியாகத் தலையிட்டு, வெலிக்கடை சிறைக்கூடத்தை அதிரடி சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகத் தலையிட்டு, பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். காயமடைந்துள்ள கைதிகளின் உயிரைக் காப்பாற்ற அவசர மருத்துவக் குழுவொன்றை அங்கு அனுப்ப வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM