(எம்.மனோசித்ரா)
நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அழுத்தம் கொடுத்து ஜனநாயகத்தைச் சீர்குலைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமாயின் நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை ஆகிய மூன்றுமே ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பிரதான தூண்களாகும். இதில் நீதித்துறை தனித்துவமானதொரு பங்கை ஆற்றுகின்ற அதேவேளை, சுதந்திர ஊடகங்களும் சிவில் சமூகப் பிரஜைகளும் ஜனநாயகத்தின் ஏனைய இரு முக்கிய தூண்களாகக் காணப்படுகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், தற்போதைய அரசாங்கம் நீதித்துறைக்குத் தொடர்ச்சியாக அழுத்தங்களை வழங்கி வருகிறது. உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கும், நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான வெற்றிடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்பதற்கும் அரசாங்கம் முனைகிறது.
இதன் மூலம் நீதிபதிகளின் சுதந்திரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த அருவருக்கத்தக்க முயற்சியைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அதனை நிராகரிக்கவும் செய்கிறோம்.
உயர் நீதிமன்றங்களின் நீதிபதி வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதே நீதித்துறைக்கு விடுக்கப்படும் மறைமுக அழுத்தமாகும். நாட்டில் நீதியை நிலைநாட்டும் செயல்முறை, சட்டத்தின் ஆட்சி மற்றும் நியாயத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்கும் கொள்கைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் முற்போக்கு எதிர்க்கட்சிகள் எப்போதும் தயாராகவே உள்ளன.
எனவே, ஜனநாயகத்திலும் நீதித்துறையிலும் கை வைக்காமல், ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிக்கும் புதிய அரசியலமைப்பை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும்.
நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்காமல், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணையை வழங்கியுள்ளனர். இந்த மக்கள் ஆணையைத் தட்டிக்கழிப்பது மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் மிக மோசமான செயலாகும் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM