எம்மில் சிலருக்கு தோல் பகுதியில் கொப்புளங்கள் ஏற்படும். இதனை சிலர் அம்மை நோய் என கருதி மாற்று மருத்துவ சிகிச்சையை வீட்டிலேயே பெற்றுக் கொள்வர். இதன் பாதிப்பு அதிகமான பிறகு, அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுவர். இந்நிலையில் மிக அரிதாக சிலருக்கு இந்த கொப்புளங்கள் உடல் முழுவதும் பரவி, பாரிய பாதிப்பை உண்டாக்கும். இதனை மருத்துவ மொழியில் பெம்பிகஸ் வல்காரிஸ் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது நவீன சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
பெம்பிகஸ் வல்காரிஸ் என்பது அரிதாக ஏற்படக்கூடிய தோல் பாதிப்பாகும். எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே தவறுதலாக தோலில் உள்ள ஆரோக்கியமான செல்கள் மீது தாக்குதல் தொடுப்பதால் ஏற்படும் ஒரு ஓட்டோஇம்யுன் டிசீஸ் ஆகும். இது பெரும்பாலும் தோல் மற்றும் சளி சவ்வுகளில் வலி மிகுந்த கொப்புளங்களை உருவாக்குகிறது. இதன் காரணமாக நாளாந்த வாழ்க்கை பாதிப்படைவதுடன் உயிருக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும்.
எம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம்.. சரும செல்களை தாக்குகிறது. இதனால் கொப்புளங்கள் மற்றும் அரிப்புகள் ஏற்படுகிறது. இது தொற்று அபாயத்தையும் அதிகரிக்கிறது. மரபணு காரணிகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். ஆண் பெண் என பாலின பேதமின்றி எந்த வயதிலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். வாய், தொண்டை, முதுகு, அந்தரங்க உறுப்புகள் என பல உறுப்புகளிலும் இத்தகைய பாதிப்புகள் கொப்புளங்களாக அறிகுறிகளை உண்டாக்கும். இதன் காரணமாக நோயாளிகளுக்கு விழுங்குவதில் கடும் சிரமமும் ஏற்படலாம்.
தோல் திசு பரிசோதனை, இம்யூனோ ஃப்ளோரசன்ஸ் பரிசோதனை, செரோலாஜிக்கல் பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி இதற்கு நிவாரணங்களை வழங்குவர். அத்துடன் உணவு முறை மாற்றங்கள், சரும பராமரிப்பு , மன அழுத்த மேலாண்மை ஆகிய துணை சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இவர்களுக்கு முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.
வைத்தியர் ஸ்ரீ ராம் தொகுப்பு அனுஷா.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM