சரத்குமார் 171

15 Jul, 2026 | 03:04 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சரத்குமார் நடிப்பில் உருவாகும் 171-வது திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அவரது பிறந்த நாளன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சரத்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை காவ்யா ஃபிலிம் கம்பனி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கிறார்.

சரத்குமாரின் பிறந்த நாளன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் வகையில் கதையும், தொழில்நுட்பக் குழுவும் இணைந்துள்ளது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் ஆகிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்து , அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

இதனிடையே கடந்த ஆண்டில் 'நேசிப்பாயா', 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', '3 பி ஹெச் கே' , 'டியூட்', 'கொம்பு சீவி' என ஐந்து படங்களில் நடித்து வசூல் ரீதியாக ராசியான நடிகர் என்ற திரையுலக வணிகர்களின் நற்பெயரை சம்பாதித்த சரத்குமார் நடிப்பில், இந்த ஆண்டு முதல் அரையாண்டில் 'ஆழி' எனும் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே வெளியானது என்பதும் அந்த திரைப்படமும் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47