சப்த மாதாக்களில் ஒருவரான வாராகி அம்மனின் அருளைப் பெறுவதற்கு ஆஷாட நவராத்திரி திருவிழா காலமே உகந்தது. இந்த காலகட்டங்களில் வாராகி அம்மனின் மந்திரங்களை நாளாந்தம் உச்சரித்து, அம்மனுக்கு பிடித்த நிவேதனங்களை படைத்து, அதனை பிரசாதமாக மற்றவர்களுக்கு வழங்கினால்... வாராஹி அம்மனின் பரிபூரணமான அருள் கிடைத்து, வாழ்க்கையில் எதிர்பார்க்காத பிரம்மாண்டமான வெற்றியை பெறலாம்.
நீங்கள் எந்த தடையை எதிர்கொண்டிருந்தாலும் வாராகி அம்மனை வழிபட தொடங்கினாள் அவை அனைத்தும் பொடி பொடியாக உடைந்து உங்களுக்கான வெற்றிப் பாதை புலப்படும் அதில் பயணித்து வெற்றி பெற்று மகிழ்ச்சியை கொண்டாடலாம்.
அந்த வகையில் வாராகி அம்மனை போற்றும் ஆஷாட நவராத்திரி திருவிழா - ஜூலை 15 ஆம் திகதியான இன்று முதல் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் வாராகி அம்மனை பிரத்யேக மந்திரங்களை உச்சரித்து வழிபடலாம் அல்லது வாராகி அம்மனுக்கான 108 போற்றிகளை நாளாந்தம் உச்சரித்து வணங்கலாம்.
வாராகி அம்மனை வணங்குவதற்கான நாமாவளிகள்...
ஓம் வாராஹி போற்றி
ஓம் சக்தியே போற்றி
ஓம் சத்தியமே போற்றி
ஓம் ஸாகாமே போற்றி
ஓம் புத்தியே போற்றி
ஓம் வித்துருவமே போற்றி
ஓம் சித்தாந்தி போற்றி
ஓம் நாதாந்தி போற்றி
ஓம் வேதாந்தி போற்றி
ஓம் சின்மயா போற்றி
ஓம் ஜகஜோதியே போற்றி
ஓம் ஜக ஜனனி போற்றி
ஓம் புஷ்பமே போற்றி
ஓம் மதிவதனி போற்றி
ஓம் மனோநாசினி போற்றி
ஓம் கலை ஞானமே போற்றி
ஓம் சமத்துவமே போற்றி
ஓம் சம்பத்கரிணி போற்றி
ஓம் பனை நீக்கியே போற்றி
ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
ஓம் தேஜஸ்வினி போற்றி
ஓம் காம நாசினி போற்றி
ஓம் யகா தேவி போற்றி
ஓம் மோட்ச தேவி போற்றி
ஓம் நான் அழிப்பாய் போற்றி
ஓம் ஞானவாரினி போற்றி
ஓம் தேனானாய் போற்றி
ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
ஓம் தேவ கானமே போற்றி
ஓம் கோலாகலமே போற்றி
ஓம் குதிரை வாகனி போற்றி
ஓம் பன்றி முகத்தாய் போற்றி
ஓம் ஆதி வாராஹி போற்றி
ஓம் அனாத ரட்சகீ போற்றி
ஓம் ஆதாரம் ஆவாய் போற்றி
ஓம் தேவிக்கு உதவினாய் போற்றி
ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
ஓம் ஜுவாலாமுகி போற்றி
ஓம் மாணிக்க வீணையே போற்றி
ஓம் மரகதமணியே போற்றி
ஓம் மாதங்கி போற்றி
ஓம் சியாமளி போற்றி
ஓம் வாக்வாராகி போற்றி
ஓம் ஞானக்கேணி போற்றி
ஓம் புஷ்ப பாணீ போற்றி
ஓம் பஞ்சமியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் சிவாயளி போற்றி
ஓம் சிவந்தரூபி போற்றி
ஓம் மதனோற்சவமே போற்றி
ஓம் ஆத்ம வித்யே போற்றி
ஓம் சமயேஸ்ரபி போற்றி
ஓம் சங்கீதா வாணி போற்றி
ஓம் குவளை நிறமே போற்றி
ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
ஓம் சர்வ ஜனனி போற்றி
ஓம் மிளாட்பு போற்றி
ஓம் காமாட்சி போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
ஓம் முக்கால ஞானி போற்றி
ஓம் சர்வ குணாதி போற்றி
ஓம் ஆத்ம வயமே போற்றி
ஓம் ஆனந்த ஆனந்தமே போற்றி
ஓம் நேயமே போற்றி
ஓம் வேத ஞானமே போற்றி
ஓம் அகந்தாய் அழிப்பாய் போற்றி
ஓம் அறிவளிப்பாய் போற்றி
ஓம் அடைக்கிடும் சக்தியே போற்றி
ஓம் கலை உள்ளமே போற்றி
ஓம் ஆத்ம ஞானமே போற்றி
ஓம் சாட்சியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராகி போற்றி
ஓம் சவுந்தர நாயகி போற்றி
ஓம் மரணம் அழிப்பாய் போற்றி
ஓம் ஹிருதய வாகீனி போற்றி
ஓம் ஹிமாச்சல தேவி போற்றி
ஓம் நாத நாமக்கிரியே போற்றி
ஓம் உருகும் கோடியே போற்றி
ஓம் உலுக்கும் மோகினி போற்றி
ஓம் உயிரின் உயிரே போற்றி
ஓம் உறவின் ஊற்றே போற்றி
ஓம் உலகம் ஆணாய் போற்றி
ஓம் வித்யா தேவி போற்றி
ஓம் சித்த வாகினி போற்றி
ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
ஓம் இலயம் ஆவாய் போற்றி
ஓம் கல்யாணி போற்றி
ஓம் பரஞ்சோதி போற்றி
ஓம் பரபிரஹ்மி போற்றி
ஓம் பிரகாச ஜோதி போற்றி
ஓம் யுவன காந்தி போற்றி
ஓம் மௌன தவமே போற்றி
ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
ஓம் நவரத்தின மாளிகா போற்றி
ஓம் துக்க நாசினீ போற்றி
ஓம் குண்டலினி போற்றி
ஓம் குவலய மேனி போற்றி
ஓம் வீணை ஒலியே போற்றி
ஓம் வெற்றி முகமே போற்றி
ஓம் சூதினை அழிப்பாய் போற்றி
ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
ஓம் அண்ட பேரண்டமே போற்றி
ஓம் சகலம் அறிவாய் போற்றி
ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் நோன்புக்கு வருவாய் போற்றி
ஓம் வாராஹி பாதமே போற்றி.
எம்மில் சிலர் 108 போற்றிகளை உச்சரிப்பதற்கு நேரமில்லை அல்லது பொறுமை இல்லை அல்லது ஒரு முகமான கவனம் இல்லை என சொல்வார்கள். இவர்களுக்காக ஒரு ஒற்றை வரி எளிய மந்திரமும் உள்ளது. 'ஓம் வஜ்ர கோஷம்' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து, வாராகி அம்மனை வணங்கினாலும்.. அம்மனின் அருள் பரிபூரணமாக கிட்டும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM