ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா? – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

Published By: Digital Desk 3

15 Jul, 2026 | 02:28 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

மாகாண ஆளுநர்கள் இராஜினாமா செய்வதைப் போல, தற்போதைய பிரதமரும் தனது பதவியை இராஜினாமா செய்வாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் புதன்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மத்திய மாகாண ஆளுநர் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்துள்ளார். மத்திய மாகாண ஆளுநர் ஏன் இராஜினாமா செய்தார்? அதற்கு என்ன காரணம்? சில தரப்பினரின் அழுத்தங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு இல்லையெனில், எதிர்காலத்தில் அவர்கள் மிகவும் மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும். தற்போது இராஜினாமா செய்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் விலகி, தற்போதைய அரசாங்கத்தில் இருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஒருவர் அண்மையில் கிராமங்களுக்குச் சென்று, தங்களுக்கு இன்னும் அதிகாரம் கிடைக்கவில்லை என்று கூறி வருகிறார். தங்களுக்கு இன்னும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கூறும் இவ்வாறான நபர்களுக்கா இந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன? தற்போதைய அரசாங்கத்துக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் இந்த நாட்டை ஆளுகிறார்கள். அவ்வாறு இருக்கையில், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கிராமம் கிராமமாகச் சென்று ஏன் பொய் கூறுகிறார்கள்? உங்களுக்கு இன்னும் என்ன அதிகாரம் வேண்டும்? இளமைக்காலத்தில் நடைபாதைகளில் கூச்சலிட்டு, போராட்டங்களை நடத்திய இந்த நபர்களுக்கு சிறிதளவேனும் அறிவு இல்லை. இவர்களுக்கு அறிவு இருந்தால், தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது, தாங்கள் மக்களுக்காக வேலை செய்கிறோம் என்று கூற வேண்டும். இவர்கள் கஞ்சா, அபின், மதுசாரம், போதைப்பொருட்களையோ அல்லது மாத்திரைகளையோ உட்கொண்டுவிட்டு மேடைகளில் பேசுகிறார்களா என்று கேட்க விரும்புகிறேன். இவர்களின் இத்தகைய பேச்சுகள் கௌரவ ஜனாதிபதியின் நற்பெயருக்கும் கௌரவத்துக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆளுநர்கள் இராஜினாமா செய்வதைப் போல, அடுத்து நியமிக்கப்படும் ஆளுநர் எத்தனை நாட்களுக்கு பதவியில் நீடிப்பார் என்பது சந்தேகமே. இவ்வாறானதொரு பின்னணியில், மாகாண ஆளுநர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்வதைப் போல, கலாநிதியாக இருக்கும் தற்போதைய கௌரவ பிரதமரும் இன்னும் சில காலத்துக்குள் தனது பதவியை இராஜினாமா செய்வாரோ என்ற பலத்த சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50
news-image

மக்களின் நம்பிக்கைகளை காப்பாற்ற முடியாமல் அரசாங்கம்...

2026-08-19 02:19:58
news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21