திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப் பிடித்துள்ளனர் - சுற்றாடல் அமைச்சர் திட்டவட்டம்

15 Jul, 2026 | 02:11 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல்போனதன் காரணமாக, அவர்கள் தற்போது எதிர்க்கட்சியைக் கைப்பற்றியுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பலாங்கொடை சமனலவௌ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கு திருடர்களுக்கு முடியாமல் போயுள்ளது. அரசாங்கத்தைக் கைப்பற்ற திருடர்களுக்கு முடியாமல்போனதன் காரணமாகவே, திருடர்கள் தற்போது எதிர்க்கட்சியைக் கைப்பற்றியுள்ளனர். எனவே, இன்று எதிர்க்கட்சியை திருடர்கள் ஆக்கிரமித்துள்ள ஒரு நிலைமையே காணப்படுகின்றது.

இந்த நாட்டு மக்கள் இதற்கு முன்னர் திருடர்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றிவிட்டதாகவே கூறினார்கள். திருடர்களைப் பிடிப்பதற்காக வந்த அரசாங்கத்தை திருடர்கள் கைப்பற்றிவிட்டார்கள் என்றே இதற்கு முன்னைய வரலாற்றில் பேசப்பட்டது.

ஆயினும், தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்னவென்றால், தற்போதைய அரசாங்கமானது நாட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் பெரிய அளவிலான கொலைகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து, அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றது. அத்துடன், தவறிழைத்தவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த அரசாங்கத்தை திருடர்களால் ஆக்கிரமிக்க முடியாமல் போனதன் காரணமாகவே, அவர்கள் தற்போது எதிர்க்கட்சியைப் பிடித்துள்ளனர். இதனால், எதிர்க்கட்சி திருடர்களின் பிடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாகவே, நாட்டில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்கள், சட்டவிரோத ஆயுத வியாபாரங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் போன்ற அனைத்து சட்டவிரோத செயல்களுக்குள்ளும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே கைது செய்யப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதை நாம் நாளாந்தம் காண்கின்றோம்.

எனவே, நாட்டில் இதுவரைக் காலம் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், பல்வேறு கொலைகள் மற்றும் தற்போது இடம்பெற்று வரும் போதைப்பொருள் கடத்தல்கள், பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற விடயங்களில் மிகவும் வெற்றிகரமான முறையில் முன்னோக்கிப் பயணிக்க முடியும் என நாம் நம்புகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50
news-image

மக்களின் நம்பிக்கைகளை காப்பாற்ற முடியாமல் அரசாங்கம்...

2026-08-19 02:19:58
news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41