அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது - பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

15 Jul, 2026 | 02:04 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

ஒட்டுமொத்த மனித நாகரிகமும் நூற்றாண்டுகளுக்கு முன்பே நிராகரித்த ஜனநாயகத்துக்கு மிகவும் பாரதூரமான நாசிச அரசியல் கோட்பாடுகளை நோக்கியே அநுர அரசாங்கம் நகர்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் புதன்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன மேற்கணடவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அரசியல் மற்றும் சிவில் சமூகம் விழிப்புணர்வுடன் இருப்பதை அறிந்து, அதற்கு மதிப்பளித்தே இந்த அரசியல் விளக்கத்தை சமூகத்தின் முன் வைக்கின்றேன். இந்த அநுர அரசாங்கம் எதிர்க்கட்சிகள் இல்லாத ஒரு வெற்று அரசியல் களத்தையே எதிர்பார்க்கிறது. இது எவ்வகையிலும் ஜனநாயகத்துக்கு சமமானதாக அமையாது. இது ஹிட்லரின் நாசிசத்துக்கு மாத்திரமே சமமானதாகும். 

தனது கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்களினால் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும் ஒரு விசித்திரமான ஆட்சி மாதிரியை இந்த சமூகத்தின் முன் நிலைநிறுத்துவதற்கே அநுர அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

அரசாங்கத்தை மாத்திரமன்றி அரச பொறிமுறையையும் முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும் என்றும், மீண்டும் தங்களைத் தவிர வேறு எந்தவொரு அரசாங்கமும் அமையாது என்றும் அவர்களின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த காலங்களில் தெரிவித்த கருத்துக்களுக்குள் இந்த ஆபத்தான அரசியல் இலக்கே மறைந்துள்ளது.

அதேவேளை, இன்று பிரதி அமைச்சர் எரங்க குணசேகர விடுத்திருந்த அறிவிப்பில், தாங்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றியுள்ள போதிலும், இன்னும் முழுமையான அரச அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை என்று கூறியுள்ளார். 

கிராம அலுவலர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோர் தாங்கள் கூறும் வழியில் செயற்படவில்லை எனில், அதற்காக அநுர அரசாங்கத்தின் இளைஞர் யுவதிகள் இந்த அரச நிர்வாகப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். 

இதன் மூலம் எமது கிராமத்தின் கிராம அலுவலர் பதவியும், பிரதேச செயலாளர் பதவியும், அரசாங்க அதிபர் பதவியும் அநுர அரசாங்கத்தின் அரசியல் செயற்பாட்டாளர்களின் விருப்பத்தின் படியே இயங்க வேண்டும் என்பதைத்தானே இந்த உரையின் மூலம் கூற வருகின்றார்கள்.

இதனைத்தான் அன்று ஹிட்லர் உலகுக்கு முன்வைத்தார். ஹிட்லர் ஆரம்பத்தில் தனது நாசிசக் கொள்கைக்கு 'தேசிய சோசலிசம்' என்று ஒரு அழகான பெயரைச் சூட்டிக்கொண்டார். இந்த அநுர அரசாங்கமும் தங்களின் கொடூரமான அரசியல் திட்டங்களுக்கு அழகான சொற்களை இணைத்துத்தான் இந்த நாசிசக் கதையைக் கூறி வருகின்றது. ஒட்டுமொத்த மனித நாகரிகமும் நூற்றாண்டுகளுக்கு முன்பே நிராகரித்த, ஜனநாயகத்துக்கு மிகவும் பாரதூரமான அரசியல் கோட்பாடுகளையே இவர்கள் இந்த நாட்டில் மீண்டும் கொண்டுவர முயற்சிக்கின்றார்கள். 

பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவின் இந்த உரை ஒரு தனிப்பட்ட நபரின் கருத்து மாத்திரமல்ல. அரசாங்கத்தை மாத்திரமன்றி அரச பொறிமுறையையும் முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்று முன்னதாக அமைச்சர் லால் காந்த கூறிய கருத்தின் தொடர்ச்சியாகவே இது அமைந்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தமட்டில், எப்போதும் மக்கள் ஆணையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கங்களே இருந்துவந்துள்ளன. இலங்கைச் சமூகத்தில் அத்தகையதொரு நாசிச ஆட்சியை விதைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அதனால்தான், இந்த அரசியல் அச்சுறுத்தலுக்கு எதிராக சமூகத்தின் மத்தியில் ஒரு வலுவான விவாதத்தை உருவாக்குவதற்கு நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும், தற்போதைய பலவீனமான எதிர்க்கட்சிச் சூழலில், பாராளுமன்றத்தில் சிறிய எண்ணிக்கையிலான ஆசனங்களைக் கொண்ட தரப்பினரே காணப்படுகின்றனர். எதிர்க்கட்சி பலவீனமடைந்து வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வேலைத்திட்டமானது, மக்கள் ஆணையின்றிய ஒரு தற்காலிக அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டது அல்ல. மக்களின் வாக்குப்பலத்தினால் வழங்கப்படும் இறுதித் தீர்மானத்தின் விளைவை மாத்திரமே அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கு அவர் தயாராக இருக்கின்றார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41
news-image

மசகு எண்ணெய் விலை 80 டொலரில்...

2026-08-18 13:46:17
news-image

நாட்டை பிளவுபடுத்தும் 22ஆவது திருத்தம் ;...

2026-08-18 19:10:50