தாய்லாந்து விடுதியில் தீ விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக அதிகரிப்பு 

15 Jul, 2026 | 01:04 PM
image

தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் உள்ள கேளிக்கை விடுதியொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

விடுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏசியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணையின்போது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இச்சம்பவம் இடம்பெற்ற வேளை, குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், கடும் போராட்டத்துக்கு மத்தியில் தீயை அணைத்தனர். 

அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக வெளியான தகவலில், 27 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.   

இந்நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. 

அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கருத்தடை செய்ததில் முறைகேடு; நாய் வேடமணிந்து...

2026-08-19 14:07:41
news-image

இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து; பங்களாதேஷ்...

2026-08-19 13:00:02
news-image

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது ;...

2026-08-19 12:41:44
news-image

உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே...

2026-08-19 12:09:52
news-image

வீதிப் பணியின் போது 4 மனித...

2026-08-19 11:38:44
news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58