முல்லைத்தீவில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர் கைது!

15 Jul, 2026 | 10:23 AM
image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்  சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த மதுபானப் போத்தல்கள் அடங்கிய தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கோட்டாபய  கடற்படைத் நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், முல்லைத்தீ கடற்படை, முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து செவ்வாய்க்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார்  ஐயாயிரத்து ஐந்நூற்று எழுபத்தைந்து மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் மற்றும் சட்டவிரோத மதுபானப் போத்தல்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலன்னறுவையில் அதிசொகுசு பேருந்து - மோட்டார்...

2026-08-11 10:50:30
news-image

மின்னேரியா தேசிய பூங்காவில் துப்பாக்கியுடன் ஒருவர்...

2026-08-11 10:34:11
news-image

குடிவரவு திணைக்களத்தின் கணினி அமைப்பில் தொழில்நுட்பக்...

2026-08-11 09:44:02
news-image

ரிதீமாலியத்த வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் நிர்மாண...

2026-08-11 09:46:06
news-image

லக்கலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாமனார்...

2026-08-11 09:28:18
news-image

மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு!

2026-08-11 09:27:07
news-image

இன்றைய வானிலை

2026-08-11 06:15:18
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு நீதித்துறைக்கு மரண...

2026-08-11 06:13:40
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்புக்கு எதிராக பாடலி...

2026-08-11 06:10:23
news-image

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்...

2026-08-11 05:27:31
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது நாட்டுக்கு...

2026-08-10 14:02:40
news-image

அரசாங்கம் பொலிஸாரை அரசியல் தேவைக்காகப் பயன்படுத்துகிறது...

2026-08-10 16:44:28