பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

15 Jul, 2026 | 09:45 AM
image

(நெவில் அன்தனி)

டலாஸ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் பிரான்ஸை மிக எளிதாக 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட மற்றொரு முன்னாள் உலக சம்பியன் ஸ்பெய்ன், 2026 பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஸ்பெய்ன் தனது உலகக் கிண்ண வரலாற்றில் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருப்பது இது இரண்டாவது தடவையாகும்.

இந்த வருட உலகக் கிண்ணத்தில் சம்பியனாகக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பிரான்ஸ் ஆரம்ப சுற்றிலும் நோக் அவுட் சுற்றிலும்   திறமையாக விளையாடி வெற்றிபெற்றிருந்தது.

அரை இறுதிப் போட்டியிலும் ஆரம்பக் கட்டத்தில் பிரான்ஸ் சிறப்பாக விளையாடிய போதிலும் நேரம் செல்ல செல்ல ஸ்பெய்ன் ஆட்டத்தை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தது.

மேலும் போட்டியின் 22ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர்  லூக்கஸ் டைஞே  தனது பெனல்டி எல்லையில் 19 வயதான லாமின் யமாலின் தொடைப் பகுதியை விதிகளுக்கு முரணான வகையில் பூட்ஸ் காலால் தாக்கியதால் ஸ்பெய்னுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை மைக்கல் ஒயாசபல் கோலாக்கி ஸ்பெய்னை முன்னிலையில் இட்டார்.

அவரது பெனல்டியை நோக்கி சரியான திக்கில் இடதுபுறமாக பிரான்ஸ் கோல்காப்பாளர் மைக் மைஞான் தாவிய போதிலும் அவரால் கோலைத் தடுக்க முடியாமல் போனது.

அதன் பின்னர் ஸ்பெய்ன் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.

ஏனயை போட்டிகளில் போன்று பிரான்ஸினால் இந்தப் போட்டியில் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் பிரான்ஸ் வீரர்கள் கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகள் இலக்க தவறிப்போயின.

இடைவேளையின்போது ஸ்பெய்ன் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் தொடர்ச்சியாக பிரான்ஸ் கோல் எல்லையை ஆக்கிரமித்த ஸ்பெய்ன் 58ஆவது நிமிடத்தில் பெட்ரொ போரோ மூலம் இரண்டாவது கோலைப் போட்டது.

பெட்ரோ போரோ, டெனி ஒல்மோ ஆகியோரின் இரட்டைப் பந்து பரிமாற்றங்களின் பலனாக இந்த கோல் போடப்பட்டது.

மூன்று நிமிடங்கள் கழித்து யாமின் லமால் புகுத்திய கோல் ஓவ்சைட் நிலையிலிருந்து போடப்பட்டதாக மத்தியஸ்தர் நிராகரித்தார்.

அதன் பின்னர் பிரான்ஸ் வீரர்கள் கிலியான் எம்பாப்வே, டிசயர் டூவ், ஊஸ்மான் டெம்ப்ள் ஆகியோரின் முயற்சிகள் அனைத்தும் வீண் போயின.

இந்த வெற்றியை அடுத்து   ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவை அல்லது முன்னாள் சம்பியன் இங்கிலாந்தை ஸ்பெய்ன் சந்திக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 197 ஓட்டங்கள்...

2026-08-19 12:41:00
news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46