மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் பதவி விலகினார்

Published By: Digital Desk 3

15 Jul, 2026 | 09:01 AM
image

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தனது பதவி விலகல் கடிதத்திற்கு இதுவரை ஜனாதிபதியிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என பேராசிரியர் அபயகோன் தெரிவித்துள்ளார்.

இந்த பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்து ஜனாதிபதி இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே இந்த பதவி விலகல் தீர்மானத்தை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆளுநராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், பேராசிரியர் சரத் அபேகோன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியை வகித்து வந்த மஞ்சுள மதஹபொல அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பதவியும் தற்போது வெற்றிடமாகியுள்ளது.

இந்தத் தற்காலிக வெற்றிடத்திற்கு நிரந்தர நியமனம் ஒன்று வழங்கப்படும் வரை, மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக்க தற்காலிகமாக அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50