(நெவில் அன்தனி)
ஐரோப்பிய கால்பந்தாட்ட பலவான்களும் முன்னாள் உலக சம்பியன்களுமான பிரான்ஸுக்கும் ஸ்பெய்னுக்கும் இடையிலான முதலாவது பீபா உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டி டலாஸ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணிக்கு ஆரம்பமாகும்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு மூன்றாவது நேரடித் தடவையாக தகுதிபெறுவதற்கு பிரான்ஸுக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றியே தேவைப்படுகிறது.
ஆனால், ஐரோப்பிய சம்பியன் ஸ்பெய்னை அரை இறுதியில் எதிர்த்தாடுவதால் பிரான்ஸ் கடும் சவாலை எதிர்கொள்ளும்.
மேலும் இந்த வருடப் போட்டியில் ஸ்பெய்ன் மிகத் திறமையாக விளையாடிவந்துள்ளது.

இந்த இரண்டு அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.
பிரான்ஸ் தனது முதல் சுற்றுப் போட்டிகளில் செனகல், ஈராக், நோர்வே ஆகிய அணிகளையும் 32 அணிகள் சுற்றில் சுவீடனையும் இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.
ஆனால் 16 அணிகள் சுற்றில் பரகுவேயுடன் கடும் சவாலை எதிர்கொண்ட பிரான்ஸ் 69ஆவது நிமிடத்தில் கிலியான் எம்பாப்பே போட்ட பெனல்டி மூலமே வெற்றிபெற்று கால் இறுதிக்குள் நுழைந்தது.

கால் இறுதியில் மொரொக்கோவை இலகுவாக வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட பிரான்ஸ் தகுதிபெற்றது.
மறுபக்கத்தில் ஸ்பெய்ன் தனது குழுவில் குட்டித் தீவு காபோ வேர்டேயிடம் கடும் சவாலை எதிர்கொண்டதுடன் அப் போட்டியை 0 - 0 என வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.
ஆனால் அதன் பின்னர் சவூதி அரேபியா, உருகுவே ஆகிய அணிகளை வெற்றிகொண்ட பிரான்ஸ் 32 அணிகள் சுற்றில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.
ஆனால், 16 அணிகள் சுற்று மற்றும் கால் இறுதி ஆகியவறறில் ஸ்பெய்ன் கடைசி நேர கோல்கள் மூலமே வெற்றிபெற்றது.
போர்த்துக்கலுக்கு எதிரான போட்டியில் உபாதையீடு நேரத்திலும் பெல்ஜியத்துக்கு எதிரான போட்டி முடிவடைய 2 நிமிடங்கள் இருந்தபோதும் மாற்றுவீரர் மைக்கல் மெரினோ போட்ட கோல்களே ஸ்பெய்னுக்கு உயிர்கொடுத்தது.
அரை இறுதியில் 8ஆவது தடவையாக பிரான்ஸ் விளையாடுகிறது
இரண்டு தடவைகள் உலக சம்பியனான பிரான்ஸ், எட்டாவது தடவையாக அரை இறுதியில் விளையாடுவதுடன் மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட முயற்சிக்கவுள்ளது.
ஒருவேளை இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் முன்னேறினால், மேற்கு ஜேர்மனிக்கு (1982, 1986, 1990) பின்னர் மூன்று தொடர்ச்சியான இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதிபெற்ற இரண்டாவது ஐரோப்பிய நாடு என்ற பெருமையைப் பெறும்.
பிரதான வீரர்கள்
பிரான்ஸ் சார்பாக இந்த உலகக் கிண்ணத்தில் 8 கோல்களைப் போட்டுள்ள அணித் தலைவர் கிலியான் எம்பாப்பே, அதிசிறந்த ஆற்றல்களைக் கொண்ட உஸ்மான் டெம்பெல், மைக்கல் ஒலிஸ், டிசயர் டூவ், ப்றட்லி பார்க்கோலா ஆகியோர் மத்திய மற்றும் முன்களத்திலும் டேயொட் உப்பாமெக்கானோ, வில்லியம் சலிபா ஆகியோர் பின்களத்திலும் மானு கோன், ஏட்றியன் ரேபியோட் மத்திய மற்றும் பின்களத்திலும் அசாத்திய திறமையை வெளிப்படுத்திவந்துள்ளனர்.
முதல் சுற்றில் 2 கோல்களைக் கொடுத்த பிரான்ஸ் அதன் பின்னர் நொக் அவுட் சுற்றில் ஒரு கோலையும் விட்டுக்கொடுக்கவில்லை. பிரதான கோல்காப்பாளர் யாசின் பூனு, கோல் காப்புகளிடையே இரும்புத்தூணாக இருப்பது பிரான்ஸுக்கு மேலும் பலத்தைக் கொடுக்கிறது.
மூன்றாவது அரை இறுதியில் பிரான்ஸ் விளையாடுகிறது
ஸ்பெய்ன் மூன்றாவது தடவையாக அரை இறுதியில் விளையாடவுள்ளது.
1950இல் அரை இறுதிவரை முன்னேறிய ஸ்பெய்ன், 2010இல் தென் ஆபிரிக்காவில் உலக சம்பியனாகி இருந்தது.
2014இல் முதல் சுற்றுடன் வெளியேறிய ஸ்பெய்ன், கடந்த இரண்டு அத்தியாயங்களில் 16 அணிகள் சுற்றுக்கு அப்பால் முன்னேறவில்லை.
ஆனால், பிரான்ஸுடன் கடைசியாக விளையாடிய இரண்டு அரை இறுதிப் போட்டிகளில் ஸ்பெய்ன் வெற்றியீட்டி இருந்தது.
ஐரோப்பிய சம்பியன்ஷிப் 2024 அரை இறுதியில் பிரான்ஸை 2 - 1 எனவும் ஐரோப்பிய நேஷன்ஸ் லீக் 2024/25 அரை இறுதியில்; 5 - 4 எனவும் ஸ்பெய்ன் வெற்றிகொண்டிருந்தது.
இதன் காரணமாக உலகக் கிண்ண அரை இறுதியிலும் ஸ்பெய்னுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என கருதப்படுகிறது.
பிரதான வீரர்கள்
கோல் காப்பாளர் யூனய் சிமோன் இந்த உலகக் கிண்ணப் போட்டி முழுவதும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு ஏகப்பட்ட கோல்களைத் தடுத்து நிறுத்தியதுடன் ஒரே ஒரு கோலை மாத்திரமே விட்டுள்ளார்.
ரொட்றி, பெட்றி, டெனி ஒல்மோ ஆகியோர் மத்திய களத்தில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்துள்ளதுடன் அவர்கள் இலகுவில் பிசகவில்லை.
ஆய்மெரிக் லாபோர்ட், பாவ் கியூபாசி, மார்க் கியூகியூரெல்லா, பெட்ரோ போரோ ஆகியோர் பின்களத்தில் மிகக் கட்டுப்பாட்டுடன் விளையாடி மத்திய மற்றும் முன்கள வீரர்களுக்கு பந்தை சிறப்பாக பரிமாறி வருகின்றனர்.
லாமின் யாமல், நிக்கோ வில்லியம்ஸ், மைக்கல் ஓயார்ஸபால் ஆகிய மூவரும் முன்களத்தில் வேகமாக நகர்ந்து கோல் போடுவதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.
எனவே இத்தகைய சிறந்த வீரர்கள் இரண்டு அணிகளிலும் இடம்பெறுவதால் இப் போட்டி ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.
அத்துடன் பிரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் கோல்காப்பாளர்களுக்கு இடையிலான போட்டியாக இந்த அரை இறுதி அமையும் என்று கூறினால் மிகையாகாது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM