நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு முயற்சி - ஜகத் குமார குற்றச்சாட்டு

14 Jul, 2026 | 05:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சுதந்திரத்தின் பின் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை. இந்த அரசாங்கம் நீதித்துறையை ஆக்கிரமித்து அதனூடாக எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு முயற்சிக்கிறது. இது ஜனநாயக விரோத செயற்பாடாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று நெல்லுக்கான உத்தரவாத விலை கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

திறைசேரி நிரம்பி வழிகிறது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.அவ்வாறாயின் விவசாயிகள் கோரும் நியாயமான விலைக்கு அமைய ஏன்  நெல்லை கொள்வனவு செய்ய முடியாது. கடந்த அரசாங்கத்திலும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது.

தமது அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.அந்த போராட்டம் இறுதியில் அரசியல் போராட்டமாக மாற்றமடைந்து ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.ஆகவே விவசாயிகளின் போராட்டத்தை அரசாங்கம் அலட்சியப்படுத்தக் கூடாது.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை. மாறாக நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது.

சுதந்திரத்தின் பின் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை. இந்த அரசாங்கம் நீதித்துறையை ஆக்கிரமித்து அதனூடாக எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு முயற்சிக்கிறது. இது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.

கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறித்து மாத்திரமே அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வத்தேகம சிறுமி உயிரிழந்ததாக பரவும் தகவல்கள்...

2026-08-19 14:02:58
news-image

போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்...

2026-08-19 13:33:52
news-image

வைத்தியசாலை முஸ்லிம் பணியாளர்களின் ஆடை விவகாரம்...

2026-08-19 13:17:25
news-image

வைத்திய உதவியாளர்களின் ஆடை சர்ச்சை: இடமாற்றம்...

2026-08-19 12:42:08
news-image

சிறுபோக நெல் கொள்வனவு: சிறு மற்றும்...

2026-08-19 12:41:22
news-image

கோண்டாவில் பல்பொருள் அங்காடி கிளையின் வியாபார...

2026-08-19 12:26:09
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி...

2026-08-19 12:25:36
news-image

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில்...

2026-08-19 12:15:15
news-image

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

2026-08-19 12:14:45
news-image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல்களில்...

2026-08-19 11:47:23
news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19