இன்றைய சூழலில் திருமணமான ஆண்களில் 25 சதவீதத்தினருக்கு மேல் மலட்டுத்தன்மை பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் விதை பையில் ஏற்படும் வீக்க பாதிப்பும் ஒரு காரணம் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதற்கு தற்போது வெரிகோசெல் எம்போலைசேஷன் எனும் நவீன சிகிச்சை அறிமுகமாகி பலன் அளிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஆண்களின் விதைப்பையில் உயிரணுக்கள், உயிரணுஅகம், ரத்த நாளங்கள் ஆகியவை உள்ளன. உயிரணுக்கள் பெரும்பாலும் இதில் இருந்து தான் உருவாகின்றன.
விதைப்பையில் உள்ள வெரிகோசெல் எனும் ரத்த நாளங்கள் இயல்பான அளவைவிட கூடுதலாக விரிவடைந்தால் வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கும். இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை. சிலருக்கு மலட்டுத்தன்மைக்கு இதுவே காரணமாகவும் திகழ்கிறது.
இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் பிரத்யேக பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, அவர்களுக்கு வெரிகோசெல் எம்போலைசேஷன் எனும் சிகிச்சையை தெரிவு செய்கிறார்கள்.
இது சத்திர சிகிச்சை அற்ற சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் மிக நுண்ணிய குழாயை உட்பகுதியில் செலுத்தி, எக்ஸ் கதிர்கள் மூலம் துல்லியமாக அவதானித்து, பிரத்யேக சாயத்தை உள்ளே செலுத்தி, ரத்த நாளத்திற்குள் செல்லும் குருதி ஓட்டத்தை தடை செய்து, ரத்த நாளத்தின் வீக்கத்தை... வலியை... குறைப்பர். அத்துடன் அந்த ரத்த நாளத்தில் தடை செய்யப்பட்ட குருதி ஓட்டம்.. மற்றொரு ரத்த நாளங்களுக்கு திசை மாற்றம் செய்யப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து குருதி விதைப்பையில் இருந்து இயல்பாக வெளியேறும். விதைப்பையின் வலியும், வீக்கமும் நீங்கும். இந்த சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால்.. இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வதுடன் மலட்டுத்தன்மையிலிருந்தும் விடுபடலாம்.
வைத்தியர் அலோக்குமார் தொகுப்பு அனுஷா.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM