கணவன் - மனைவி இடையேயான கருத்து வேறுபாடு நீங்குவதற்கான எளிய வழிமுறை

14 Jul, 2026 | 05:26 PM
image

இன்றைய சூழலில் கருத்து வேறுபாடு காரணமாக.. பிரிவை நோக்கி பயணிக்க கூடிய உறவுகளில் கணவன் மனைவி இடையேயான உறவு தான் முதன்மையானதாக இருக்கிறது. திருமணம் செய்து கொண்டு குறிப்பிட்ட காலம் வரை ஒன்றாக பயணித்து குடும்ப வாழ்க்கையை வாழ்வதற்கு திட்டமிட்ட தம்பதிகள்... நாளடைவில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வெவ்வேறு திசையில் பயணிப்பது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இவர்களுக்கிடையே புரிதல் இருந்தாலும் ஒன்றாக இணைந்து வாழ்வதில் விவரிக்க இயலாத சங்கடங்கள் ஏற்படுகின்றன. இதனால் கணவன் மனைவி இடையேயான புனிதமான உறவு நீடிப்பதற்கு - பல்வேறு தடைகளை கடந்து நீடிப்பதற்கு-  எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான வழிமுறைகளை முன்மொழிந்து உள்ளனர்.

திருமணமான தம்பதிகள் கருத்து வேறுபாடு உருவாகிறது என்றாலே அவர்கள் தங்களுடைய ஜாதகத்தை ஒரு சோதிட நிபுணரிடம் காண்பிக்க வேண்டும். கணவன் அல்லது மனைவி ஆகிய இருவரது லக்னத்திலோ அல்லது லக்னத்தின் ஏழாம் இடத்திலோ கோச்சார ரீதியாக ராகு அல்லது கேது பயணித்தால் கருத்து வேறுபாடு எழும்

அதேபோல் கணவன் மற்றும் மனைவியின் ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீட்டிலிருந்து ஏழாம் வீட்டில் கோச்சார ரீதியாக ராகு அல்லது கேது பகவான் பயணிக்கிறார் என்றாலும் கருத்து வேறுபாடு எழும்.

இதனை கணவனும் மனைவியும் துல்லியமாக அவதானித்து புரிதல் உடன் இதற்கான இறைவழிபாட்டை மேற்கொள்ள தொடங்கினால் நாளடைவில் பிரிவு மறைந்து ஒன்றிணைவர்.

செவ்வாய் -வெள்ளி- சனி -ஆகிய கிழமைகளில் உங்களது வீட்டிற்கு அருகே உள்ள அரச மரமும் வேப்ப மரமும் இணைந்த மரத்தின் கீழ் அமையப்பெற்றிருக்கும் விநாயகர் மற்றும் நாகர்களின் சிலைக்கு ராகு கால வேளையில் பால் அபிஷேகமும் பிரத்யேக பூஜையும் செய்துவர ... பிரச்சனைகளின் தாக்கம் குறைய தொடங்கும். இந்த மரத்தினை ஒன்பது முறை வலம் வந்து வணங்கினாலும் பலன் உண்டு.

அருகில் இருக்கும் நாக தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேட அபிஷேக அலங்காரம் செய்து வழிபட்டாலும் ஒன்றாக வாழ்வதற்கான வழிவகை உண்டாகும்.

செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் மல்லிகை மலரை வாங்கி மாலையாக தொடுத்து கணவன் மனைவி இருவரும் ராகு கால வேளையில் அருகில் இருக்கும் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு மாலையை சாற்றி வணங்கினாலும் கணவன் மனைவி இடையேயான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

இணைந்து வாழ கணவன் தயாராக இருந்தும்.. மனைவி முரண்டு பிடித்தால்.. கணவர் , வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால்.. மனைவியிடத்தில் மனமாற்றம் ஏற்பட்டு, இல்லறம் மீண்டும் சிறக்கும்.

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை தகர்க்கும் பிரத்யேக வழிமுறை..!

2026-08-18 16:38:10
news-image

பணத்தை சேமிக்கும் சுருக்கு பை சூட்சுமம்!

2026-08-17 15:20:29
news-image

உங்கள் ராசியும் அதிர்ஷ்ட வண்ணமும்

2026-08-15 17:08:56
news-image

செவ்வாய் தோஷம் நீங்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-14 14:25:37
news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31