தமிழ் திரையுலகில் நிலையான சந்தை மதிப்பை கொண்டுள்ள நட்சத்திர நடிகரான அருள்நிதி- ஆரவ் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அருள்வான்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'வேல் செவ்வேல்' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, ஜான் விஜய், காளி வெங்கட் , விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். மலைவாழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு படமாக தயாராகி இருக்கும் இதனை 90 பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற :வேல் செவ்வேல்..' எனத்தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் எஸ். ஞானக்கரவேல் எழுத, பின்னணி பாடகர்கள் மது பாலகிருஷ்ணன் மற்றும் அஸ்வின் சத்யா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். அடர்ந்த மலைப் பகுதியில் வாழும் பூர்வ பழங்குடியின மக்களின் வழிபாடு சார்ந்த இறையியல் பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடல்... இசை ரசிகர்களை கடந்து ஆன்மீக பக்தர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM