எம்பிலிப்பிட்டியவில்  தம்பதியினர் படுகொலை ; சந்தேகநபரான மகன் கைது

Published By: Digital Desk 3

14 Jul, 2026 | 04:49 PM
image

எம்பிலிப்பிட்டிய பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படும்,  குறித்த தம்பதியினரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரலவெல்கடுவ பகுதியில் நேற்று முன்தினம் (13)  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தம்பதியினர் இருவர்  படுகொலை செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸாருக்கு கிடைத்த தகவலக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்ட  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.  கிரலவெல்கடுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய தாயும், 58 வயதுடைய தந்தையுமே இவ்வாறு  உயிரிழந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு  காரணமாக இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.    சந்தேகநபர்  தனது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.  சம்பவத்துடன் தொடர்புடைய 26 வயதுடைய சந்தேகநபரான தம்பதியினரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான மீள்குடியேற்ற உதவிகள்...

2026-08-19 15:11:21
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41
news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42