ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் மலிங்கவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மேற்படி போட்டித் தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர்ப் பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை சற்று முன் வெளியிட்டது. அதில், மலிங்கவின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.

அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பெரிதும் சோபிக்காத லஹிரு திரிமான்னே மற்றும் கௌஷல் சில்வா ஆகியோருக்குப் பதிலாக, ரோஷன் சில்வா அல்லது சதீர சமரவிக்கிரம இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்களாகக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளியன்று ஆரம்பமாகும் இந்த டெஸ்ட் போட்டி இலங்கை கலந்துகொள்ளும் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.