(செ.கவிஷனா)
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் செலவிடும் டொலர் தொகையை 2030ஆம் ஆண்டளவில் கணிசமான மட்டத்திற்கு அதிகரிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி ஒருவரின் சராசரி நாளாந்த செலவு 148 டொலர்களாக மாத்திரமே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவது தொடர்பாக களுத்துறை மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாம் ஆட்சிக்கு வந்த பின்னர், குறிப்பாக கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னரான சுற்றுலாப் பயணிகளின் நடத்தை மற்றும் அவர்களின் செலவீனங்கள் குறித்து விசேட ஆய்வு ஒன்றை மேற்கொண்டோம். அதனடிப்படையில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி ஒருவர் சராசரியாக 148 டொலர்களையே செலவிடுகிறார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், கடந்த 2018 - 2019 காலப்பகுதியில் இந்தத் தொகை 171 டொலர்களாகக் காணப்பட்டது.
எனவே, வரும் 2030ஆம் ஆண்டளவில் சுற்றுலாப் பயணி ஒருவர் செய்யும் இந்தச் சராசரி செலவீனத்தை அதிகரிப்பதே எமது பிரதான இலக்காகும். இதன் மூலமே பொருளாதாரத்திற்கான பங்களிப்பை எம்மால் அதிகரிக்க முடியும். இதனைச் சாத்தியமாக்க வேண்டுமாயின், எமது நாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் அனுபவங்களை நாம் அதிகரிக்க வேண்டும். இது தானாக நடந்துவிடாது, முறையான திட்டமிடலின் கீழ் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM