(க.சிவலிங்கமூர்த்தி)
கட்டுமானத்துறையின் ஊடாக எமது படைப்பாற்றலையும் நிலைபேண்தகைமைக்கான அர்ப்பணிப்பையும் உலகிற்கு நிரூபித்துக்காட்டும் வாய்ப்பு இலங்கைக்கு நிச்சயம் கிடைக்கும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற 14 ஆவது உலக கட்டுமானதுறை மாநாடு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான நிலைபேண்தகைமை விருது வழங்கல் விழாவில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கட்டுமானத்துறை என்பது ஒரு நாட்டின் பொருளாதார செயல்பாட்டின் பிரதிபலிப்பாகும். அத்துடன், அது ஒரு தேசத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் காரணியாகவும் அமைகிறது.
இலங்கையின் கட்டுமானத்துறை நாட்டுக்கு வழங்கிய பங்களிப்புக்கு அதுக்குரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். நிலைபேண்தகைமை என்பது எப்போதுமே எமது நாட்டின் தனித்துவமான அடையாளமாகவும் வாழ்வியல் முறையாகவும் இருந்து வந்துள்ளது.
நிலைபேண்தகைமை வாய்ந்த கட்டுமானத்துறையின் பங்காளியாக மாறுவதற்கு இலங்கை நீண்டகாலமாகவே ஆர்வம் காட்டி வந்துள்ளது.
எனினும், உட்கட்டமைப்பு வசதிகள், நிதி ஆளுமை மற்றும் வளங்களின் பற்றாக்குறை காரணமாக அந்த இலக்கை எம்மால் முழுமையாக அடைய முடியாமல் போயுள்ளது.
எமது தாய்நாட்டின் எதிர்காலம் குறித்து நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். கட்டுமானத்துறையின் ஊடாக எமது படைப்பாற்றலை மட்டுமன்றி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், தேசிய விழுமியங்களை பேணுவதற்கும், நிலைபேண்தகைமை கோட்பாடுகளை மேம்படுத்துவதற்குமான எமது அர்ப்பணிப்பை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு நிச்சயம் கிடைக்கும்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் கட்டுமானத்துறையினர் மத்தியில் உரையாற்றியபோது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து எதிர்வு கூற முற்பட்டு நான் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டேன்.
தற்போது நான் உத்தியோகபூர்வமாக ஒரு அரசியல்வாதி என்பதால், மீண்டும் அவ்வாறானதொரு பொருளாதார கணிப்பீட்டை மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்துகொள்கிறேன் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM