ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

14 Jul, 2026 | 03:58 PM
image

புது டெல்லியில் நடைபெற்ற விழாவில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு, இலக்கியத்திற்கான 'ஞானபீட விருது' வழங்கப்பட்டது.

இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருது ஞானபீட விருது. இந்த ஆண்டிற்கான ஞானபீட விருதுக்கு கவிப்பேரரசு வைரமுத்து தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவரது பிறந்த நாளான இன்று அவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதினை மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் டொக்டர் கரன்சிங் வழங்கினார்.‌ இந்நிகழ்வில் ஞானபீட விருதுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் சாகு அகிலேஷ் ஜெயின்- ஸ்ரீ முதத் ஜெயின்- பிரதீபா ராய் -ஆர். என். திவாரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந் நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில், '' நல்லது காண்பது இலக்கியம். நம்பிக்கை ஊட்டுவது இலக்கியம். 'விரும்பியது அமையாவிட்டால் அமைந்ததை விரும்பு' என்கிறது உபநிஷத். :அமைந்ததை விரும்பாவிட்டால்.. விரும்பியதை அமை' என்கிறது இலக்கியம்.

இது அறுபதாவது ஞானபீட விருது. இந்த விருது என்னை ஒரு சாய்வு நாற்காலியில் சாய்த்து விடாது. இது ஓடி வந்த குதிரைக்கு நீட்டப்படும் புல் அல்ல. குதிரை மீது விழுந்த மற்றொரு சாட்டையடி. குதிரை இன்னும் வேகம் எடுக்கும். நான் வெறி கொண்டு ஓடுவேன். இந்த விருதுக்கு என் தமிழ் இன்னும் நியாயம் செய்யும்'' என்றார்.

இதனிடையே இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய இந்திய விருதான ஞானபீட விருதினை இதற்கும் முன் எழுத்தாளர் அகிலன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் பெற்றிருக்கிறார்கள் என்பதும், இவர்களைத் தொடர்ந்து கால் நூற்றாண்டிற்கு பிறகு கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47