(க.சிவலிங்கமூர்த்தி)
நாட்டின் பல்வேறு பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை வரவேற்புப் பிரிவு கடமைகளில் தொடர்ந்து ஈடுபடுத்துவதற்கு எதிராக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் எஸ்.டி. ஷஷினி மனேஷா சிறிவர்தனவினால் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை வரவேற்புப் பிரிவு கடமைகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக இதற்கு முன்னரும் பல தடவைகள் எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், நாட்டின் சில பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்னும் இக்கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக எமது சங்கத்துக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பிலோ அல்லது அவர்களுக்குரிய பணி நிரலிலோ உள்ளடக்கப்படாத இவ்வாறான கடமைகளில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் தன்னிச்சையாக அதிகாரிகளைப் பலவந்தமாக ஈடுபடுத்தி வருகின்றனர்.
வரவேற்புப் பிரிவு கடமைகளுக்கென அலுவலக காரியாலய உதவியாளர் அல்லது பொருத்தமான வேறொரு அதிகாரியை நியமிக்க வேண்டியுள்ள போதிலும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இவ்வாறான பணிகளில் ஈடுபடுத்துவதால் அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள உண்மையான களப்பணிகளையும் காரியாலயப் பணிகளையும் முன்னெடுப்பதில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரச சேவையின் வினைத்திறன் பாதிக்கப்படுவதுடன், உத்தியோகத்தர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
எனவே, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில்சார் கண்ணியத்தையும் அவர்களது கடமைகளின் முக்கியத்துவத்தையும் கருத்திற்கொண்டு, இவ்வாறான பொருத்தமற்ற பணிப் பகிர்வுகளை உடனடியாக நிறுத்துமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அவசியமான ஆலோசனைகளையும் பணிப்புரைகளையும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.
இக்கடிதத்தின் பிரதிகள் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்நாட்டலுவல்கள் மேலதிக செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட, பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM