நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே காரணம் – குணதாச அமரசேகர

Published By: Digital Desk 3

14 Jul, 2026 | 02:35 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் வரலாற்றில் முதல் தடவையாக 08க்கு மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு, பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறையான பரிந்துரைகளை அதிகாரிகள் அமுல்படுத்தத் தவறியமையே பிரதான காரணமாகும் எனத் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

முன்னைய அநுராதபுரம், தங்காலை, மஹர மோதல்களைப் போலன்றி, இம்முறை பிரதான அதிகாரி உட்பட அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை, சிறைச்சாலைகள் பாதாள உலகக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதையே காட்டுகிறது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி, ஆயுதமற்ற அதிகாரிகளை முன்னிறுத்தி இவ்வாறான ஆபத்தான தீர்மானங்களை எடுத்தமை மிகப்பெரிய தவறாகும்.

தற்போது சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் உள்ளவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடனும், கைதிகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் அபராதம் செலுத்த முடியாத நிலையிலுமே அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான கைதி ஒருவரைப் பராமரிக்க அரசாங்கம் நாளொன்றுக்கு 1,000 ரூபாய்க்கும் மேல் மக்கள் பணத்தைச் செலவிட்டு, அவர்களை மேலும் பாரிய குற்றவாளிகளாக மாற்றுகிறது. இதற்குப் புதிய சிறைச்சாலைகளை அமைப்பது தீர்வாகாது.

உலகிலுள்ள வேறு எந்த நாடுகளிலும், ஏன் நம்மை விடவும் பின்தங்கியதும் முட்டாள்தனமானதுமான சிறைச்சாலை அமைப்பைக் கொண்டுள்ள இந்தியாவில்கூட இவ்வாறான அடிப்படைத் தவறுகள் செய்யப்படுவதில்லை. அங்கும் கூட இவ்வாறான செயல்பாடுகள் பிழையானவையாகவே கருதப்படுகின்றன. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல், நோயாளிகளாகப் பார்த்து மறுவாழ்வு அளிப்பதே சிறைச்சாலை நெருக்கடிக்கான ஒரே தீர்வாகும்.

போதைப்பொருள் ஒழிப்புக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராகப் பணியாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் 11 கூட்டங்களில் ஒரு கூட்டத்தில் மட்டுமே பங்கேற்றார். எனினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர, சிரேஷ்ட சட்டத்தரணி கலியாநந்த திராணகம மற்றும் பேராசிரியர் தியநாத் சமரசிங்க ஆகியோரின் பங்களிப்புடன் 27 அரச நிறுவனங்களை இணைத்து இந்த 27 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டது. எனவே, அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார போன்றோர் வெறும் சோகங்களை வைத்து நாடகமாடாமல், ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சாமர சம்பத் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அனைவரும் இந்த அறிக்கையை வாசித்து, அதன் பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுவாஞ்சிகுடியில் வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை:...

2026-08-19 14:54:37
news-image

நெடுந்தீவுக்கான படகுச் சேவைகளில் குறைபாடுகள் ;...

2026-08-19 14:42:34
news-image

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி...

2026-08-19 14:44:18
news-image

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச...

2026-08-19 14:53:54
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டை...

2026-08-19 14:29:16
news-image

வவுனியா வேப்பங்குளத்தில் வீடு முற்றாக தீக்கிரை...

2026-08-19 14:36:46
news-image

பாதுகாப்பு காரணங்களால் கிளிநொச்சி ஊடக அமையத்தின்...

2026-08-19 14:34:12
news-image

இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸார் இருவருக்கு...

2026-08-19 14:31:01
news-image

நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை...

2026-08-19 14:29:13
news-image

யானை – மனித மோதலில் மட்டக்களப்பு...

2026-08-19 14:18:14
news-image

இந்திய "கிராண்ட் மாஸ்டர்" ஆகாஷ் கணேசன்...

2026-08-19 14:21:24
news-image

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ.3,900...

2026-08-19 14:12:41