மாத்தறை ஆதார வைத்தியசாலையின் பின் வளவில் இருந்து, அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு 40 முதல் 50 வயதுக்குள் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

அடையாளம் காணப்படும் வரை சடலத்தை மாத்தறை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைத்திருக்க முடிவு செய்த பொலிஸார், சடலம் எவ்வாறு மருத்துவமனையின் பின் வளவுக்கு வந்தது என்பது உள்ளிட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.