(நமது நிருபர்)
இலங்கை இலக்கிய வரலாற்றில் புதிய தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் சமமான முன்னுரிமை அளித்து, நாட்டில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'கொழும்பு இலக்கிய விழா - 2026' (Colombo Literary Festival – 2026) எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை கொழும்பு 7இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்க விற்பனை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் முன்னணி 5 பதிப்பகங்களின் உரிமையாளர்களை பணிப்பாளர்களாகக் கொண்டு இயங்கும் 'கொழும்பு இலக்கிய விழா – தனியார் நிறுவனம்' இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவினை ஏற்பாடு செய்துள்ளதுடன், 6 நாட்கள் தொடர்ச்சியாக காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ள இவ்விழா, உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் இலங்கையின் இலக்கியச் செழுமையைப் பிரதிபலிக்கும் முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது.
இலங்கை மற்றும் சர்வதேச ரீதியிலான புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மற்றும் அறிஞர்கள் பலரின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த இலக்கிய விழா, ஒரு பரந்த கலாசார மற்றும் அறிவுசார் கலந்துரையாடல் தளமாக அமையவுள்ளது. இதன் கீழ் இலக்கியத்தின் தற்போதைய போக்குகள், சமூக – அரசியல் தாக்கங்கள் மற்றும் அதன் எதிர்காலம் குறித்த விவாதங்களும், அறிவுசார் கலந்துரையாடல்களும் நடத்தப்படவுள்ளன.
இந்த விழாவிற்கு இணையாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் வழிநடத்தும் பல்வேறு கருப்பொருள்களிலான விவாதங்கள், உயர்தர உள்நாட்டு மற்றும் சர்வதேச நூல்களை ஒரே நேரத்தில் பார்வையிடவும், கொள்வனவு செய்யவும் வாய்ப்பளிக்கும் புத்தகக் கண்காட்சி, சினிமா இரசிகர்களுக்காக கொழும்பு 7இல் உள்ள ஜேர்மன் கலாசார மையத்தில் நடத்தப்படும் சர்வதேச திரைப்படக் கண்காட்சி மற்றும் இலக்கிய அனுபவத்துக்கு இசை மாலைப் பொழுதுகள் போன்ற பல விசேட அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM