(செ.சுபதர்ஷனி)
"முழு நாடுமே ஒன்றாக'' என்ற நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய திங்கட்கிழமை (13) மாத்திரம் 855 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
''முழு நாடுமே ஒன்றாக'' – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாடு முழுவதும் சுமார் 859 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், 855 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
மேற்படி நடவடிக்கைகமைய 1 1 கிலோ 652 கிராம் ஐஸ் போதைப்பொருள், 892 கிராம் ஹெரோயின், 876 கிராம் கஞ்சா , 6 கிலோ 196 கிராம் குஷ், 2 கிலோ 444 கிராம் மாவா மற்றும் 3,529போதை மாத்திரைகள் ஆகியன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கைதான 7 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பாவனை அடிமையானவர்கள் என கண்டறியப்பட்ட மேலும் 5 சந்தேகநபர்கள் மறுவாழ்வு மத்திய நிலையங்களு்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM