(நமது நிருபர்)
வெவ்வேறு பிரதேசங்களில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பில்லவத்த பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் திங்கட்கிழமை (13) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 205 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மாதம்பிட்டிய பள்ளிவாசலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த சொகுசு வாகனம் ஒன்றைச் சோதனையிட்டபோது, பெரும் தொகையான போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (13) பகல் வேளையில் மாதம்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்த இச் சுற்றிவளைப்பின் போது, குறித்த பெண்ணின் வசம் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஆவார்.
இச்சம்பவம் குறித்து மாதம்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிஸ்ஸக மாவத்தை பகுதியில் விஷத்தன்மை வாய்ந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் திங்கட்கிழமை (13) நடத்திய விசேட சுற்றிவளைப்பில் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 111 கிராம் 770 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM