ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் ; இந்தியர் உயிரிழப்பு ; 8 பேர் காயம் 

14 Jul, 2026 | 12:28 PM
image

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான 2 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணித்தபோது, ஈரான் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததோடு 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை ஈரானின் 2 ஏவுகணைகள் இக்கப்பல்களை தாக்கியதாக கூறப்படுகிறது. 

இந்தத் தாக்குதல் தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்ட தகவலின்படி, மொம்பாசா (Mombasa), அல் பாஹியா  (Bahiya) ஆகிய சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையின் தெற்கு பகுதியில் ஓமன் கடற்பரப்பின் வழியே இந்தக் கப்பல்கள் கடந்து சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

நடத்தப்பட்ட தாக்குதலில் மொம்பாசா கப்பலில் இருந்த இந்தியரே உயிரிழந்ததாகவும் மேலும், 6 இந்தியர்கள், 2 உக்ரைன் நாட்டினர் என  8 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

ஈரானின் தாக்குதலில் கப்பல்களுக்கும் பாரியளவில் சேதமடைந்துள்ளதால் ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சர்வதேச சட்ட விதிமீறலில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்க அமீரகத்துக்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து; பங்களாதேஷ்...

2026-08-19 13:00:02
news-image

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது ;...

2026-08-19 12:41:44
news-image

உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே...

2026-08-19 12:09:52
news-image

வீதிப் பணியின் போது 4 மனித...

2026-08-19 11:38:44
news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58
news-image

சமநேரத்தில் ஒரே எண்ணைக் கொண்ட இரு...

2026-08-17 12:33:08