உலக அளவில் சுற்றுலாத் துறையில் புகழ்பெற்ற “ட்ராவல் அண்ட் டூர் வேர்ல்ட் ” சஞ்சிகை வெளியிட்டுள்ள '2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்களின்' புதிய தரவரிசையில் இலங்கை முதல் 50 இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
சர்வதேச சமையல் சுற்றுலாத்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நாடுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த வருடாந்திரப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா நிபுணர்களால் பின்வரும் பல்வேறு முக்கிய காரணிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசைத் தொகுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய உணவு உறைவிடம் மற்றும் பிராந்திய பன்முகத்தன்மை.
வீதியோர உணவு கலாசாரம் மற்றும் நேர்த்தியான உணவு அனுபவங்கள்
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் நிலையான உணவுப் பழக்கவழக்கங்கள்
பானப் பாரம்பரியங்கள் மற்றும் ஒட்டுமொத்த உணவு அனுபவம்.
"இலங்கை என்பது நறுமணமுள்ள மசாலாப் பொருட்கள், வெப்பமண்டல பொருட்கள் மற்றும் பல நூற்றாண்டுகால கலாசார தாக்கங்கள் ஒன்றிணைந்து மறக்க முடியாத உணவு அனுபவங்களை வழங்கும் ஒரு துடிப்பான உணவுத் தேசமாகும். இங்குள்ள பரபரப்பான வீதியோரக் கடைகள் முதல் கடற்கரையோர நேர்த்தியான உணவகங்கள் வரை அனைத்தும் தனித்துவமானவை" என பாராட்டியுள்ளது.
இலங்கையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 முக்கிய உணவுத் தலங்கள்:
இலங்கையின் உணவுச் சிறப்புகளைக் கொண்டாடும் வகையில், நாட்டின் 10 பிராந்தியங்களை ட்ராவல் அண்ட் டூர் வேர்ல்ட் பரிந்துரைத்துள்ளது.
கொழும்பு: சோறு மற்றும் கறி, கொத்து ரொட்டி, ஆப்பம் மற்றும் புதிய கடல் உணவுகள்.
காலி: கடல் உணவு வகைகள், பாரம்பரியக் கறிகள் மற்றும் காலனித்துவ கால உணவகங்கள்.
கண்டி: பாரம்பரிய சோறு மற்றும் கறி, உள்ளூர் இனிப்புப் பண்டங்கள்.
நீர்கொழும்பு: களப்பு கடல் உணவுகள், சுடப்பட்ட மீன் மற்றும் கடல் உணவுக் கறிகள்.
எல்ல: இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் மலைநாட்டு உணவு முறைகள்.
யாழ்ப்பாணம்: காரசாரமான நண்டுக்குழம்பு , தோசை மற்றும் தமிழ் பாரம்பரிய தனித்துவமான சுவைகள்.
மிரிஸ்ஸ: கடற்கரையோர உணவகங்கள் மற்றும் புதிய கடல் உணவுகள்.
நுவரெலியா: தேயிலை சார்ந்த உணவு வகைகள் , பேஸ்ட்ரிகள் மற்றும் காலனித்துவ கால கிளாசிக் உணவுகள்.
ஹிக்கடுவை: சுவையான கடல் உணவுகள் மற்றும் துடிப்பான கடற்கரையோர உணவு அனுபவங்கள்.
திருகோணமலை: புதிய கடல் உணவுகள் மற்றும் உண்மையான கிழக்குக் கடற்கரை உணவு முறைகள்.
இந்தப்பட்டியலில் லத்தீன் அமெரிக்காவின் மெக்சிகோ முதலிடத்தைப் பிடித்துள்ளதோடு, ஐரோப்பாவின் இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
சர்வதேச அங்கீகாரமானது, இலங்கைக்கான சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை, குறிப்பாக உணவு சார்ந்த கலாசாரப் பயணங்களை விரும்புவோரை மேலும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்கள்
1. மெக்சிகோ
2. இத்தாலி
3. ஸ்பெயின்
4. ஜப்பான்
5. இந்தியா
6. அமெரிக்கா
7. கிரீஸ்
8. போர்த்துக்கல்
9. சீனா
10. இந்தோனேசியா
11. பிரான்ஸ்
12. பெரு
13. தாய்லாந்து
14. வியட்நாம்
15. தென் கொரியா
16. ஆர்ஜென்டினா
17. பிரேசில்
18. துருக்கி
19. லெபனான்
20. மொராக்கோ
21. கொலம்பியா
22. பிலிப்பைன்ஸ்
23. ஈரான்
24. மலேசியா
25. தைவான்
26. ஐக்கிய இராச்சியம்
27. ஜேர்மனி
28. ஜமைக்கா
29. தென் ஆப்பிரிக்கா
30. சிங்கப்பூர்
31. ஜோர்ஜியா
32. குரோஷியா
33. போலந்து
34. ஆஸ்திரியா
35. சிலி
36. எகிப்து
37. எத்தியோப்பியா
38. ஹங்கேரி
39. பெல்ஜியம்
40. கனடா
41. அவுஸ்திரேலியா
42. சுவிட்சர்லாந்து
43. நெதர்லாந்து
44. ஸ்வீடன்
45. அயர்லாந்து
46. நியூசிலாந்து
47. டென்மார்க்
48. கியூபா
49. பாகிஸ்தான்
50. இலங்கை














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM