போதைப்பொருள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட பொருட்களுடன் இளைஞன் கைது

Published By: Digital Desk 3

14 Jul, 2026 | 10:47 AM
image

(நமது நிருபர்)

தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரன்கொட பிரதேசத்தில், பெருந்தொகையான ஐஸ் போதைப்பொருள், கண்ணிவெடிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் திங்கட்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன முகாம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது, 09 கிலோகிராம் 128 கிராம் ஐஸ் போதைப்பொருள், மனிதர்களுக்கு எதிரான 03 கைக்குண்டுகள் மற்றும் அவற்றின் 03 பியூஸ் பாகங்கள், M16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 20 செயற்பாட்டுத் தோட்டாக்கள், 05 வாள்கள், மின்னணு தராசு ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இச்சம்பவத்தில் மண்டாவல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் இது தொடர்பான தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58
news-image

சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்ததும்,...

2026-08-19 16:32:02
news-image

கடும் வெப்பம் : நீண்ட நேரம்...

2026-08-19 17:11:35
news-image

வடகிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் நோக்கில் மகாவலி...

2026-08-19 17:12:34
news-image

மட்டக்களப்பில் 216 கி.மீ. மின்வேலி அமைப்பு:...

2026-08-19 17:24:19