(நெவில் அன்தனி)
மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரவேற்பு நாடான இங்கிலாந்தை 270 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டு வரலாறு படைத்தது.
இதற்கு முன்னர் இங்கிலாந்து மகளிர் அணியினர் தங்களது நாட்டில் 19 விளையாட்டரங்குகளில் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தது. இந்த டெஸ்டுடன் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டை அரங்கேற்றிய 20ஆவது விளையாட்டரங்கு லோர்ட்ஸ் ஆகும்.
212 வருட வரலாற்றைக் கொண்ட தற்போதைய லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதன் மூலம் இந்த மைதானத்தில் முதலாவது டெஸ்ட் வெற்றியை ஈட்டிய அணி என்ற பெருமையை தனதாக்கிக்கொண்டது.
யஸ்டிக்கா பாட்டியா இரண்டாவது இன்னிங்ஸில் குவித்த அபார சதம், ஸ்ம்ரித்தி மந்தனா இரண்டு இன்னிங்ஸ்களிலும் குவித்த அரைச் சதங்கள், க்ரான்தி கௌடின் 5 விக்கெட் குவியல், ஸ்னேஹ் ரானாவின் 4 விக்கெட் குவியல் என்பன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.


கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, ஸ்ம்ரித்தி மந்தனா, அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர், தீப்தி ஷர்மா ஆகியோர் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, க்ரான்தி கௌட் என்பவரின் 5 விக்கெட் குவியலுடன் கூடிய சிறப்பான பந்துவீச்சில் சிக்கித் திணறி சகல விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 115 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இந்தியா, 2ஆவது இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7 விக்கெட்களை இழந்து 341 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய யஸ்டிக்கா பாட்டியா கன்னிச் சதம் குவித்து இந்தியாவை பலமான நிலையில் இட்டார்.
ஸ்ம்ரித்தி மந்தனா இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைச் சதம் குவித்ததுடன் ரிச்சா கோஷும் 50 ஓட்டங்களைப் பெற்றார்.
457 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தார்.

எண்ணிக்கை சுருக்கம்
இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 285 (ஸ்ம்ரித்தி மந்தனா 83, ஹாமன்ப்ரீத் கோர் 58, தீப்தி ஷர்மா 57, ஜெமிமா ரொட்றிகஸ் 35, சொஃபி எக்லஸ்டோன் 68 - 3 விக்., லோரென் ஃபைலர் 40 - 2 விக்., இஸி வொங் 41 - 2 விக்., மெடி வில்லியர்ஸ் 79 - 2 விக்.)
இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 170 (அமி ஜோன்ஸ் 52, நெட் சிவர் - நைட் 44, க்ரான்தி கௌட் 37 - 5 விக்., சயலி சடகாரே 40 - 2 விக்., ஸ்னேஹ் ரானா 41 - 2 விக்.)
இந்தியா 2ஆவது இன்: 341 - 7 விக். டிக்ளயார்ட் (யஸ்டிக்கா பாட்டியா 113, ஸ்ம்ரித்தி மந்தனா 70, ரிச்சா கோஷ் 50 ஆ.இ., ஷஃபாலி வர்மா 33, சொஃபி எக்லஸ்டோன் 118 - 5 விக்., லோரென் பெல் 27 - 2 விக்.)
இங்கிலாந்து (வெற்றி இலக்கு 457 ஓட்டங்கள்) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 186 (அமி ஜோன்ஸ் 54, சொஃபி எக்லஸ்டோன் 50, மெடி வில்லியர்ஸ் 26, ஸ்னேஹ் ரானா 42 - 4 விக்., சயலி சட்காரே 27 - 2 விக்., தீப்தி ஷர்மா 36 - 2 விக்., க்ரான்தி கௌட் 54 - 2 விக்.)
ஆட்டநாயகி: க்ரான்தி கௌட்














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM