(எம்.மனோசித்ரா)
காலி முகத்திடலில் இடம்பெற்ற பரதநாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்வு அரச செலவில் நடத்தப்பட்டதல்ல. தனியார் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மட்டுமே நான் கலந்துகொண்டேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து எவ்வித விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அண்மையில் காலி முகத்திடலில் இடம்பெற்ற கின்னல் உலக சாதனைக்கான முயற்சியாக சுமார் 5000 நடனக் கலைஞர்களின் பங்கேற்புடன் பரத நாட்டிய நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு தனியார் நிறுவனமே அதனை ஏற்பாடு செய்திருந்தது. இந்திய, இலங்கை நிறுவனங்கள் இணைந்து தான் அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
அந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் விருப்பத்துடனும், இணக்கப்பாட்டுடனேயே பங்கேற்பாளர்கள் அதில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பிற்கமையவே நான் அதில் கலந்து கொண்டேன். தற்போதைய அரசியல் சூழலில் சில எதிர்க்கட்சிகள் எங்கள் மீது சேரு பூசுவதற்காக இந்நிகழ்வு அரச செலவில் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளன.
அந்த வகையில் இந்த நிகழ்வுக்கு பணம் அறவிடப்பட்டதாகவும், அதில் நான் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவித்து இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இதில் ஊழலொன்று இடம்பெற்றிருந்தால் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் மீது முறைப்பாடளித்திருக்க வேண்டுமே தவிர, அதில் கலந்து கொண்ட என் மீது அல்ல.
அந்த வகையில் என்மீது முறைப்பாடளித்திருப்பது வேடிக்கையாகவுள்ளது. எவ்வாறிருப்பினும் இது குறித்த விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் நிச்சயம் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவேன். விசாரணை எதிர்கொள்ள தயாராகவும் இருக்கின்றேன் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM