இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ வேக்குனாகொட இரட்டைச் சதம்; பலமான நிலையில் இலங்கை

Published By: Vishnu

13 Jul, 2026 | 09:08 PM
image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (13) ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் செனுக்க வேக்குனாகொட குவித்த ஆட்டம் இழக்காத இரட்டைச் சதத்தின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி இன்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 344 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

துல்னித் சிகேரா (0), திமன்த மஹாவித்தான (2) ஆகிய இருவரும் முதல் 4 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்ததால் இலங்கை இளையோர் அணி பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (3 - 2 விக்.)

ஆனால், சேனுஜ வேக்குனாகொட மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் இரட்டைச் சதம் குவித்ததுடன் மூன்று இணைப்பாடடங்களில் பங்களிப்பு செய்து இலங்கை அணியை பலமான நிலையில் இட்டார்.

அணித் தலைவர் விமத் தின்சாரவுடன் 3ஆவது விக்கெட்டில் 143 ஓட்டங்களையும் உப தலைவர் கவிஜ கமகேவுடன் 4ஆவது விக்கெட்டில் 128 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகலவுடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களையும் சேனுஜ வேக்குனாகொட பகிர்ந்தார்.

227 பந்துகளை எதிர்கொண்ட சேனுஜ வேக்குனாகொட 31 பவுண்டறிகளுடன் ஆட்டம் இழக்காமல் 203 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

விமத் தின்சார 52 ஓட்டங்களையும் கவிஜ கமகே 49 ஓட்டங்களையும் பெற்றனர்.

சாமிக்க ஹீனட்டிகல 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்..

பந்துவீச்சில் காவிய பரேஷ் பட்டேல் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 197 ஓட்டங்கள்...

2026-08-19 12:41:00
news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46