டெங்கு பரவல் அச்சம் : கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் இணையவழியில்!

13 Jul, 2026 | 05:58 PM
image

(நமது நிருபர்)

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை நாளை (14) முதல் ஒருவார காலத்திற்கு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் டெங்கு பரவலுக்கு மத்தியில், மாணவர்களிடமிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையைக் கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் இடம்பெற்ற போதிலும் பல்கலைக்கழகம் வழமை போல் திறந்திருக்கும் என்றும், அனைத்துப் பணியாளர்களும் வழக்கம் போல் சேவைக்குச் சமுகமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாணவர் விடுதிகளும் திறந்தே இருக்கும்.

இதேவேளை, நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இதற்கு முன்னதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைபீடம் மற்றும் முகாமைத்துவப் பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளும் இணையவழியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறுகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளத் தயார் -...

2026-08-13 12:34:12
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு விசாரணை நிறைவுறும்...

2026-08-13 17:11:47
news-image

இளைஞர்கள் மத்தியிலும் பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு...

2026-08-13 13:24:31
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம்...

2026-08-13 14:44:27
news-image

மீனவர்களின் வாழ்வாதாரம் முதல் இறங்குதுறைமுகம் வரை!...

2026-08-13 23:20:58
news-image

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம்...

2026-08-13 14:45:49
news-image

அரசியலமைப்பு திருத்தம் குறித்த நகர்வுக்கு எதிராக...

2026-08-13 15:48:34
news-image

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதி...

2026-08-13 15:52:05
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறை சுதந்திரத்தைப்...

2026-08-13 16:31:44
news-image

பிரதமரின் கல்வி மறுசீரமைப்பு ரணில் ஆட்சியில்...

2026-08-13 16:51:29
news-image

நாட்டுக்காக 22ஆவது திருத்தத்தை கைவிடுவது சிறந்தது...

2026-08-13 17:44:39
news-image

ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்...

2026-08-13 19:16:02