கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின் மூளையில் உண்டாகும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

13 Jul, 2026 | 05:19 PM
image

இன்றைய சூழலில் இளம் தம்பதிகள் தங்களது மகப்பேற்றை நன்கு திட்டமிட்ட பிறகே மேற்கொள்ள தொடங்குகிறார்கள். உளவியல் ரீதியாகவும், உடலில் ரீதியாகவும் முழுமையாக தயாரான பிறகு குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிடுகிறார்கள். இந்த தருணத்தில் தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியை அவதானிக்க மகப்பேறு வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.

இத்தகைய தருணத்தில் மூவாயிரம் சிசுக்களில் ஒரு சிசுவிற்கு மூளை பகுதியில்.. மூளையை பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும் செரிப்ரோஸ்பைனல் எனும் திரவத்தை உற்பத்தி செய்யும் பகுதியில் நீர்கட்டி பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பிற்குரிய சிகிச்சை குறித்த‌ விளக்கத்தை வைத்தியர்கள் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்கள்.

கரு தரித்த இரண்டு மற்றும் மூன்றாவது மாதங்களில் பெண்மணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இத்தகைய தருணங்களில் சில பெண்மணிகளின் சிசுவின் மூளை பகுதியில் குறைந்த அளவு உடைய நீர்க்கட்டிகள் உருவாகும். பொதுவாக இவை எத்தகைய பின் விளைவையோ.. பக்க விளைவையோ.. ஏற்படுத்தாது. மேலும் நாளடைவில் இத்தகைய நீர்க்கட்டி தானாக மறைந்து விடும். இருப்பினும் சில பெண்களுக்கு அவர்களின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு இத்தகைய நீர்க்கட்டி பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மூளையின் பாதுகாப்பிற்காக எம்முடைய மூளை பகுதியில் உள்ள கோரொய்ட் பிளெக்ஸஸ் எனும் செரிப்ரோஸ்பைனல் திரவத்தை உற்பத்தி செய்யும் பகுதிகளில் நீர் திரட்சி அல்லது நீர்க்கட்டி உருவாகிறது. மூளையின் வென்ட்ரிக்ல்ஸ் என அழைக்கப்படும் ரத்த நாளங்களின் ஒரு பகுதியிலோ அல்லது இரண்டு பகுதிகளிலோ உண்டாகக்கூடும். இத்தகைய நீர் கட்டிகள் இயல்பான அளவை விட அளவில் பெரியதாகவோ... அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலோ... அல்லது உடல் உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அறிகுறிகளை கொண்டிருந்தாலோ... இத்தகைய நீர் கட்டிகள் பாதிப்பிற்கு சிகிச்சை அவசியம் ஆகிறது.

பொதுவாக இத்தகைய நீர் கட்டிகளை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலம் அவதானித்த பிறகு அவர்களின் மரபணு குறித்த பரிசோதனையை மேற்கொள்வார்கள். அத்துடன் இத்தகைய நீர்க்கட்டிகள் தானாக மறையவில்லை என்றால்.. அதனைத் தொடர்ந்து இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உண்டு. அத்துடன் வயிற்றில் வளரும் சிசுவின் வாய், தலைப்பகுதி, கால் ஆகியவற்றின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என அவதானிக்கப்படுவதால்... இதற்கு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். குழந்தை பிறந்த பின் இதற்கான சத்திர சிகிச்சை மேற்கொள்கிறார்கள்.

வைத்தியர் டெய்ஸி தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜெனிட்டோயூரினரி டியூபர்குளோசிஸ் எனும் சிறுநீரகத்தில் ஏற்படும்...

2026-08-18 16:54:32
news-image

கேஸ் கீஸர் சிண்ட்ரோம் எனும் பாதிப்பிற்குரிய...

2026-08-17 15:34:34
news-image

ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் : சிறுநீரக பாதிப்பிற்கான...

2026-08-15 17:08:15
news-image

மலக்குடலில் ஏற்படும் கட்டிகளை அகற்றி நிவாரணமளிக்கும்...

2026-08-14 14:28:38
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-13 18:12:25
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எக்ஸ்ட்ராகார்போரியல்...

2026-08-13 18:14:22
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-08-12 16:05:53
news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41