குடும்ப பொருளாதார நெருக்கடி- தகுதி- திறமை- அனுபவம்- வாய்ப்பு - நண்பர்களின் ஆதரவு -வங்கிகளின் கடன் உதவி -அரசாங்க அனுசரணை- வாடிக்கையாளர்களை கவரும் உத்தி- என தொழிலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து காரணிகளையும் அறிந்திருந்தாலும்... அதனை நடைமுறைப்படுத்தினாலும்... எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியவில்லை என்றால்.. தொழிலில் வெற்றி பெறுவது கடினமாகிவிடும்.
இத்தகைய தருணத்தில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் உச்சம் பெற்று வெற்றியும், லாபத்தையும் தொடர்ந்து பெற வேண்டும் என்றால்... அதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேக வழிபாடுகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள் : மலர்கள்
உங்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் அஸ்வினி- மகம்- மூலம் -உள்ளிட்ட கேது பகவானின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால்.. நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கு சாமந்தி பூவை சாற்றி வழிபட தொடங்கினால் வெற்றி உறுதியாகும்.
உங்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் பரணி- பூரம்- பூராடம்- ஆகிய சுக்கிர பகவானின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால்... நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கு முல்லைப் பூவை மாலையாக சாற்றி வழிபடத் தொடங்கினால் லாபம் அதிகரிக்கும்.
உங்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் கார்த்திகை -உத்திரம்- உத்திராடம் - ஆகிய சூரிய பகவானின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால்... நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கு செவ்வரளி பூவை மாலையாக சாற்றி வழிபடத் தொடங்கினால்.. தொழிலில் லாபம் பெருகும்.
உங்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் ரோகிணி- ஹஸ்தம்- திருவோணம்- ஆகிய சந்திர பகவானின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால்... நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கு பாரிஜாத பூவை சாற்றி வழிபட்டால் வெற்றி நிச்சயம்.
உங்களுடைய ஜாதகத்தில் சனிபகவான் மிருக சீரிடம் -சித்திரை -அவிட்டம்- ஆகிய செவ்வாய் பகவானின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால்... நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கு ஜாதிமல்லி பூவை மாலையாக தொடுத்து சாற்றி வழி படத் தொடங்கினால்.. வெற்றியும், லாபமும் அதிகரிக்கும்.
உங்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் திருவாதிரை- சுவாதி- சதயம்- ஆகிய ராகு பகவானின் நட்சத்திரத்தில் இருந்து அமர்ந்திருந்தால்... நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கு வில்வ மலரை சாற்றி வழிபடத் தொடங்கினால்.. வெற்றி மேம்படும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM