பான் இந்திய நட்சத்திர நடிகராக புகழ்பெற்ற மலையாள நடிகர் பகத் பாசில் கதையின் நாயகனாக- மாயஜால வித்தை செய்யும் கலைஞனாக நடித்திருக்கும் 'டோன்ட் ட்ரபுள் த ட்ரபுள்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
தெலுங்கு இயக்குநர் சஷாந்த் யெலேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள் ' திரைப்படத்தில் பகத் பாசில், சாரா பலேகர், சவுரப் சச்தேவா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பிராட் ஃபிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு காலா பைரவா இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சோபு எர்லகட்டா - பிரசாந்த் தேவினேனி- எஸ். எஸ். கார்த்திகேயா- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். எஸ். ராஜமௌலி வழங்குகிறார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் பதினோராம் திகதி முதல் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மாயஜால வித்தை கலைஞனுக்கும்.. ஒரு பெண் பிள்ளைக்கும் இடையேயான உறவும்... ஃபேண்டஸி அம்சங்களும் வித்தியாசமான விஷுவல் எஃபெக்ட்ஸ்களுடன் இடம் பிடித்திருப்பதால் ...ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM