'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- கதையை வழி நடத்திச் செல்லும் முதுமையான மற்றும் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் 'ட்ரெயின்' திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ட்ரெயின்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஜெயராம், கே. எஸ். ரவிக்குமார், நாசர், டிம்பிள் ஹயாதி, பாவனா, திரி குன், கலையரசன், வினய் ராய், நரேன், சம்பத் ராஜ், கனிகா, சிங்கம் புலி, கணேஷ் வெங்கட்ராம், யூகி சேது, ஐரா தேவானந்த், பூர்ணா, ப்ரீத்தி கரன், சமூக செயற்பாட்டானார் அன்பு ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பௌசியா ஃபாத்திமா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிஷ்கின் இசையமைத்திருக்கிறார். புகையிரத வண்டியின் பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் திரைப்பட துறையில் முத்திரை பதித்த முன்னணி இயக்குநர்கள் பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தின் நாயகனான விஜய் சேதுபதி பேசுகையில், '' மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'சைக்கோ' படத்தை பார்த்தேன். அந்தப் படம் என்னை வெகுவாக பாதித்தது. அதன் பிறகு இயக்குநர் மிஷ்கினை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து விட்டு நடிக்க வாய்ப்பு கேட்டதுடன் உங்களுடன் இணைந்து பணியாற்றவும் தயார் என்று சொன்னேன். அதன் பிறகு அவரது இயக்கத்தில் உருவான 'பிசாசு 2' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தேன். இதனைத் தொடர்ந்து 'ட்ரெயின்' படத்தின் கதையை சொன்னதும் இதில் இணைந்து பணியாற்றுவோம் என்றேன். மிஷ்கின் மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் அன்பை பார்த்து வியந்து.. அந்த அன்பை அனுபவித்ததால் ஒப்புக்கொண்டேன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும்'' என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM