'ஜமா' படத்தின் மூலம் படைப்பாளியாகவும், நடிகராகவும் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாரி இளவழகன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அன்பே டயானா' திரைப்படம்- வட சென்னையில் வாழும் ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை விவரிக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அன்பே டயானா' திரைப்படத்தில் பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா செல்வமணி, 'பரிதாபங்கள்' கோபி, செல் முருகன், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் - நியோ கேஸில் கிரியேசன்ஸ் - இரா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் யுவராஜ் கணேசன்- சத்யா கரிகாலன் -இரா. சரவணன்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் எந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், சமுத்திரக்கனி, இயக்குநர் தினகரன் சிவலிங்கம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''வடசென்னை பகுதியில் உள்ள பெரம்பூரில் வாழும் ஆங்கிலோ இந்திய சமூக மக்களின் வாழ்வியல் பின்னணியில் கிராஸ்- கல்ச்சர் லவ் ஸ்டோரியாக 'அன்பே டயானா' உருவாகி இருக்கிறது. இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் கொமர்சல் அம்சங்களுடன் தயாராகி உள்ளது'' என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM