'மக்கள் செல்வி' ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக அதிக மின்சார சக்தி கொண்ட சுகுமாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஓ !சுகுமாரி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓ !சுகுமாரி' திரைப்படத்தில் திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், முரளிதர், விஷ்ணு, ஜான்சி , அமனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சி ஹெச். குஷேந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் மஞ்சி ராஜு இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் சுகுமாரி- கிராமிய பின்னணியில் எதிர்பாராத விதமாக அதிக அளவு மின்சார சக்தி கொண்ட பெண்ணாகவும் இதை தெரிந்து கொள்ளாமல் அவளை திருமணம் செய்து கொள்ளும் நாயகனும் எதிர்கொள்ளும் சவால் நிறைந்த வாழ்க்கையை தான் இந்த முன்னோட்டம் விவரிப்பதால்.... ரசிகர்களுக்கு படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்திட வேண்டும் என்ற ஆவல் எழுந்திருக்கிறது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM