இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி, ‘சீக்கு’ (முயல்) என்று தன்னை அழைப்பதற்கான காரணத்தை தற்போதைய அணித் தலைவர் விராட் கோலி விளக்கியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், பொலிவுட் நடிகர் அமீர் கானுடன் பேசியபோதே கோலி அந்த இரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

“பதினேழு வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் அணியில் நான் விளையாடும்போது எனது சிகையலங்காரம் சற்று வித்தியாசமாக இருந்தது. இதனால், எனது காதுகள் இரண்டும் மற்றவர்களை விடப் பெரிதாகத் தோற்றமளித்தது. இதனால் எல்லோரும் என்னை சீக்கு என்று குறிப்பிட்டனர். அதையே டோனி பிடித்துக்கொண்டார். ஸ்டம்ப் மைக்கின் மூலம் அது உலகுக்கே வெளிச்சமாகிவிட்டது” எனக் கூறிச் சிரித்தாராம் கோலி!