(எம்.மனோசித்ரா)
தேர்தல் மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, தங்களது அதிகார மோகம் காரணமாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமைச்சர் வசந்த சமரசிங்க ஒரு விசித்திரமான கதையைக் கூறியிருக்கிறார். இவர்கள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை கடந்த காலத்தில் கடுமையாக விமர்சித்த ஒரு குழுவினர் ஆவர்.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை என்பது இந்த நாட்டை அழிப்பதற்காக ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் கொண்டு வரப்பட்ட ஒரு திருத்தம் மற்றும் முன்மொழிவு என்றுதான் நீண்டகாலமாக ஜே.வி.பி., தேசிய மக்கள் சக்தி மற்றும் பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் கூறி வந்தார்கள்.
ஆனால், தற்போது அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகையில், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவி மக்களுக்குத் தேவை என்று கூறினால், அதனைத் தக்கவைத்துக் கொள்ளவும் நாங்கள் தயார் என்று குறிப்பிடுகிறார்.
இது என்ன கதை? ஜனாதிபதி பதவியை ஒழிப்போம் என்று தேர்தல் மேடைகளில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது அந்த வாக்குறுதிகளைப் பக்கத்தில் தள்ளிவிட்டு, ஜனாதிபதி பதவியைப் பாதுகாப்பதற்காக முன்நிற்கும் ஒரு குழுவாக தேசிய மக்கள் சக்தி மாறிவருகிறது.
தேசிய மக்கள் சக்தியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை எங்களுக்குக் கூற வேண்டும். தேர்தலுக்கு முன்பு கூறிய நிலைப்பாடா அல்லது தற்போது புதிதாக முன்வைக்கும் நிலைப்பாடா? இதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது.
ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்ததன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மோகம் காரணமாக, இப்போது அதிகாரத்தை கைவிட முடியாமல் அதனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முன்நிற்கும் ஒரு குழுவாக அவர்கள் மாறியிருக்கிறார்கள்.
இந்த நிலைமைக்கு மத்தியில், தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் மக்கள் நலன் சார்ந்த ஒரு செயல்பாட்டிற்குள் நுழையும் என்று நாம் எவ்வாறு நம்புவது? கடந்த இரண்டு வருடங்களாக நாம் அதனைப் பார்க்கவில்லை.
அவர்கள் படிப்படியாகத் தங்களது வாக்குறுதிகளிலிருந்தும், ஒழுக்கநெறி சார்ந்த செயல்பாடுகளிலிருந்தும் விலகிச் செல்கிறார்கள். அவர்கள் தங்களுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பாராளுமன்றத்தின் மூலமாகவும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியின் மூலமாகவும் பல்வேறு வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை ஒடுக்குவதற்கு முயற்சிக்கிறார்கள் என்பதை நாங்கள் மிகவும் தெளிவாகக் கூற விரும்புகிறோம் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM