இராணுவத் தளபதியின் பதவிக்கால நீடிப்பு சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னேற்றத்தை பாதிக்கிறது – சாமர சம்பத்

13 Jul, 2026 | 04:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதியினால் தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வருவதன் காரணமாக, இராணுவத்தில் உள்ள திறமையான மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலருக்கு இராணுவத் தளபதி பதவிக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

குருணாகலையில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், 

பாதுகாப்புப் பிரிவுகளில் இன்று மேற்கொள்ளப்படும் நியமனங்கள் மற்றும் தீர்மானங்களுக்குப் பின்னால் குறிப்பிட்டதொரு மதத் தாக்கம் இருந்து வருகிறது. இன்று இராணுவத் தளபதி மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்தையும் கர்தினாலே வழிநடத்துவதுபோல் தெரிகிறது. தற்போதைய இராணுவத் தளபதிக்கு அடுத்ததாக வரப்போவது ஒரு 'பெர்னாண்டோ' வாகும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் இந்த மாதம் 02ஆம் திகதியுடன் முடிவடைகிறது. முன்னரும் இராணுவ தளபதியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இப்போது மீண்டும் ஒருமுறை நீட்டிக்க கோரியுள்ளனர்.

இப்போது யார் இராணுவத் தளபதியை நியமிப்பது? 02 ஆம் திகதி ஒரு பெரிய பழக்கூடையுடன் தற்போதைய இராணுவத் தளபதி சென்றார். அந்தப் பழக்கூடையைத் தயாரித்தவர்தான் என்னிடம் இதைக் கூறினார்.

தற்போது அந்த இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை 2027 ஜனவரி அல்லது பெப்ரவரி வரை நீட்டிக்கப் போகிறார்கள். இது நீண்ட காரணமாகும், அடுத்ததாக ராணுவ தளபதி பதவிக்கு இருக்கின்றவர் மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன. அவரின் வாய்ப்பு முடிந்தது.

மேஜர் ஜெனரல் உடுகமவும் இல்லை. அவரும் ஓய்வுபெறுகிறார். மேஜர் ஜெனரல் நளின் பண்டாரநாயக்கவும் வீட்டுக்குச் செல்கிறார். இவர்களில் எவருக்கும் ஒரு நாள் கூட இராணுவத் தளபதி பதவியை வகிக்க முடியாமல் போகிறது.

இவர்களும் இந்த நாட்டுக்காக உழைத்தவர்கள். இவர்களில் எவருக்கும் மீண்டும் இராணுவத் தளபதியாகும் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. அடுத்த ராணுவத் தளபதியாகப்போவது ஒரு பெர்னாண்டோவாகும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50