(இராஜதுரை ஹஷான்)
பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அவர்களின் குடியுரிமை அந்தஸ்த்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் யோசனை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று ராஜபக்ஷர்களுடன் கூட்டணியமைக்க முயற்சிப்பது அவரது அரசியல் கொள்கையை வெளிப்படுத்துகிறது. தேவைக்கு ஏற்ப அரசியல் கொள்கையை மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை எதிர்கட்சித் தலைவர் திருத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்து தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் புதிய சட்டம் வெகுவிரைவில் இயற்றப்படும்.பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.
பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பிரத்தியேக சட்டவரைவு தற்போது தயாரிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. வெகுவிரைவில் அந்த சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும்.
பாதாளக்குழுக்களுக்கும், போதைப்பொருளுக்கும் எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று எதிர்;கட்சியினர் தான் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. பாதாளக்குழுக்களுடன் கொண்டுள்ள தொடர்பு விசாரணைகளில் வெளிவரும் என்று எதிர்க்கட்சியினர் தற்போது அச்சமடைந்துள்ளார்கள்.
பாதாளக்குழுக்களுக்கும், போதைப்பொருளுக்கும் எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை எவ்வழியிலாவது நிறுத்த வேண்டும் என்றே முயற்சிக்கிறார்கள்.அதற்காக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அவர்களின் குடியுரிமை அந்தஸ்த்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் யோசனை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று ராஜபக்ஷர்களுடன் கூட்டணியமைக்க முயற்சிப்பது அவரது அரசியல் கொள்கையை வெளிப்படுத்துகிறது.
தேவைக்கு ஏற்ப அரசியல் கொள்கையை மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை எதிர்கட்சித் தலைவர் திருத்திக் கொள்ள வேண்டும்.எதிர்;க்கட்சியினர் எதற்காக கூட்டணியமைத்துள்ளார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். ஊழல் மோசடியில் ஒருவர் சிறைச் செல்லும் போது வெளியில் இருந்து அவருக்காக குரல் கொடுப்பதற்காகவே எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளார்கள்.இதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM