(செ.கவிஷனா)
பாடசாலைகளின் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையானது, கடந்த ஆண்டின் சுற்றறிக்கையின் ஒரு சில வார்த்தைகளை மாற்றிவிட்டு அதே சுற்றறிக்கையையே மீண்டும் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இதனால் நாட்டின் கல்விதுறையில் கடுமையான நெருக்கடிகளையும், சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் பிரியந்த பெரண்டோ கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கம் விளம்பரப்படுத்தி வரும் நிலையில் நடைமுறையில் கல்வி அமைச்சு அதற்கு நேர்மறையாகவே செயல்பட்டு வருகிறது.
கல்வி அமைச்சானது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 25 ஆம் இலக்க சுற்றறிக்கையின் ஒரு சில வார்த்தைகளை பெயரளவில் மாற்றிவிட்டு அதே சுற்றறிக்கையை மீண்டும் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
அரசப் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை வருவதற்கு பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது முதன்மைக் காரணம் என்று அரசாங்கம் கூறி வரும் நிலையில், 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் தனியார் பாடசாலைகளில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 இலட்சமாக அதிகரித்துள்ளது.
அரசப் பாடசாலைகளின் தரம் மற்றும் திட்டமிடல் குறைபாடுகளால் பெற்றோர் தனியார் பாடசாலைகளை நோக்கி செல்கிறார்கள். அதாவது தற்போதைய சுற்றறிக்கையின் பின்னணியில் தனியார் கல்வியை மேலும் ஊக்குவித்து அரசாங்கத்தின் இலாபம் ஈட்டும் மறைமுக நிகழ்ச்சி நிரல் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும், வகுப்பறை ஒன்றில் இருக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 35 ஆகக் குறைக்கப்பட வேண்டும் என்று 2014 ஆம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த போதிலும், புதிய சுற்றறிக்கையில் அதனைப் பொருட்படுத்தாமல் ஒரு வகுப்பறையில் 40 மாணவர்களை அனுமதிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு எண்ணிக்கையிலான மாணவர்களை வைத்துக்கொண்டு ஆசிரியர்களால் புதிய கல்வி சீர்த்திருத்தங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியாது.
வீட்டிற்கு அருகில் இருக்கும் பாடசாலை சிறந்த பாடசாலை என்ற கருப்பொருளின் கீழ் ஒவ்வொரு மாணவரின் வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்துக்குள் தகுதியான பாடசாலைகளை உருவாக்கி தருவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த நிலையில், தற்போதைய சுற்றறிக்கை தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது.
50 அல்லது 60 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மாணவர்களுக்கு சில பிரபல பாடசாலைகளுக்குச் செல்லவே இது வழிவகுக்கிறது. இதனால் கிராமப்புறங்களில் 3 முதல் 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் சிறிய பாடசாலைகளை மூடிவிடும் ஒரு மறைமுக காரணி இதன் பின்னணியில் அரங்கேறி வருகிறது. எனவே இந்த முறையற்ற சுற்றறிக்கையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM