(நெவில் அன்தனி)
சீனாவின் ஓர்தோஸ் விளையாட்டரங்கில் வார இறுதியில் நடைபெற்ற அங்குரார்ப்பண 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.

ஆடவருக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 49.03 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கை வீரர் அயோமல் அக்கலன்க வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் புதிய தேசிய சாதனையையும் நிலைநாட்டினார்.
இதன் மூலம் 26 வருடங்களாக ஹரிஜன் ரட்நாயக்கவுக்கு சொந்தமாக இருந்த 49.44 செக்கன்கள் என்ற சாதனை அயோமல் அக்கலன்கவினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் சீன வீரர் ஸின்ஃபெங் ஸூ (48.68 செக்.) தங்கப் பதக்கத்தையும் அவரது சக வீரர் அனான் யே (49.04 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை ஜித்மா விஜேதுங்க வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். அவர் அப் போட்டியை 53.10 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

இந்தப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை ஜோன்பிபி ஹக்மோவா (51.19 செக்.) தங்கப் பதக்கத்தையும் பிலிப்பைன்ஸ் வீராங்கனை நயோமி ஜோன்சன் (52.34 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கையின் மதுஷானி ஹேரத் 13.25 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை (14.24 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும் சீன வீராங்கனை ஹுய் ஸவ் (13.56 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM