ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர் சாம் நீல் காலமானார்

Published By: Digital Desk 3

13 Jul, 2026 | 02:15 PM
image

“ஜுராசிக் பார்க்” திரைப்படத் தொடரில் வருகிற வைத்தியர் ஆலன் கிராண்ட் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் மூத்த நடிகர் சாம் நீல் காலமானார்.

சாம் நீல் தனது 78ஆவது வயதில் குடும்பத்தார் சூழ, அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட்ஸ் பிரைவேட் வைத்தியசாலையில்  உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் எதிர்பாராத மற்றும் திடீர் இழப்பாக நேர்ந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு இவருக்கு 3-வது கட்ட இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும், தொடர் சிகிச்சைகளின் மூலம் அவர் சமீபத்தில் புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்திருந்தார் எனக் கூறப்பட்டது.

1947இல் வட அயர்லாந்தில் பிறந்த இவர், பின்னர் 1954இல் தனது குடும்பத்துடன் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். சட்டக் கல்வியில் தோல்வியடைந்த பிறகே இவர் நாடகத்துறைக்குள் பிரவேசித்தார்.

1993ஆம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் உலகப் புகழ்பெற்ற 'ஜுராசிக் பார்க்' திரைப்படத்தில் 'டொக்டர் ஆலன் கிராண்ட்' என்ற தொல்பொருள் ஆய்வாளர் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகெங்கும் உள்ள இரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தார். பின்னர் இதன் தொடர்ச்சிகளான ஜுராசிக் பார்க் III மற்றும் ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் ஆகிய படங்களிலும் இவர் நடித்தார்.

ஒஸ்கார் விருது பெற்ற The Piano (1993), Sleeping Dogs (1977), My Brilliant Career (1979), Omen III (1981), The Hunt for Red October (1990) மற்றும் Hunt for the Wilderpeople (2016) உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1986ஆம் ஆண்டு 'ஜேம்ஸ் பாண்ட்' பாத்திரத்திற்காக ரோஜர் மூருக்குப் பின் நடிக்கவிருந்த முக்கிய தேர்வுகளில் இவரும் ஒருவராக இருந்து ஸ்க்ரீன் டெஸ்ட் வரை சென்றார்.

புகழ்பெற்ற வரலாற்று மற்றும் குற்றப் பின்னணித் தொடரான Peaky Blindersஇல் ஊழல் நிறைந்த மேஜர் செஸ்டர் கேம்ப்பெல் பாத்திரத்திலும், The Tudors தொடரிலும் நடித்துப் பாராட்டுப் பெற்றார்.

திரையுலகிற்கு அவர் ஆற்றிய மிகச்சிறந்த சேவைகளைப் பாராட்டி, 1991இல் பிரிட்டிஷ் பேரரசின் அதிகாரி (OBE) என்ற கௌரவமும், 2007இல் நியூசிலாந்தின் தகைசால் துணை தகைமையாளர் (DCNZM) விருதும் இவருக்கு வழங்கப்பட்டன. பின்னர் 2022ஆம் ஆண்டு இவருக்கு முறைப்படி 'நைட்ஹூட்' (Knighthood) விருது வழங்கப்பட்டு 'சர்' (Sir) பட்டம் சூட்டப்பட்டது.

மத்திய ஒடாகோ (Central Otago) ஒயின் பிராந்தியத்தில் 'டூ பேடாக்ஸ்' (Two Paddocks) என்ற பெயரில் பண்ணை மற்றும் ஒயின் தயாரிப்பு ஆலையை நடத்தி வந்தார். அங்குள்ள தனது வளர்ப்புப் பிராணிகளுக்குத் தன்னுடன் நடித்த சக ஹொலிவுட் பிரபலங்களான லாரா டெர்ன், கைலி மினோக், ஹெலினா போன்ஹாம் கார்ட்டர் ஆகியோரின் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார்.

இவரது மறைவுக்கு அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் எக்ஸ் (X) தளத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். அதில், "சாம் நீஸல்  அவுஸ்திரேலியர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். தனது நோயை அவர் மிகுந்த கண்ணியம், நகைச்சுவை மற்றும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டார். அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்" என்று ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கருத்தடை செய்ததில் முறைகேடு; நாய் வேடமணிந்து...

2026-08-19 14:07:41
news-image

இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து; பங்களாதேஷ்...

2026-08-19 13:00:02
news-image

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது ;...

2026-08-19 12:41:44
news-image

உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே...

2026-08-19 12:09:52
news-image

வீதிப் பணியின் போது 4 மனித...

2026-08-19 11:38:44
news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58