“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”: சபரகமுவ மாகாணத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டம்!

13 Jul, 2026 | 01:34 PM
image

சபரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின்  ஏற்பாட்டில், இரத்தினபுரி அறநெறி பாடசாலை ஒன்றியத்தின் பங்களிப்புடன் “உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்” என்ற விசேட விழிப்புணர்வுத் திட்டம் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே சிறுவயது முதலே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும், அதன் மூலம் அவர்களின் எதிர்கால உயர்கல்வித் தேவைகளைத் தடையின்றிப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இம்மாபெரும் முகாம்கள் பக்திப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.

இவ்விழிப்புணர்வுத் திட்டத்தின் கீழ் மாதம்பை – இந்துமாமன்றம் அறநெறி பாடசாலை ,ஹவுப்பை – திருச்சுடர் அறநெறி பாடசாலை, பொரனுவ – கலைஜோதி அறநெறி பாடசாலை, கஹவத்தை – துர்கா அறநெறி பாடசாலை, அவிசாவலை – குடாகம ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை மற்றும் சாய் சரணாலய அறநெறி பாடசாலை ஆகிய அறநெறிப் பாடசாலைகளில் விசேட நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

இந்நிகழ்வுகளின் போது, கலந்துகொண்ட மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர்களுக்குச் சேமிப்பு உண்டியல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இம்மாபெரும் விழிப்புணர்வு முகாம்களில் அந்தந்த அறநெறிப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 76...

2026-08-18 16:14:07
news-image

பெருந்தோட்டங்கள், வடக்குப் பகுதியில் சாதனை படைக்கும்...

2026-08-18 17:33:07
news-image

ருவான்வெல்ல கோணகல்தெனிய ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2026-08-17 12:24:15
news-image

இலங்கை ஊடகர்களுக்கு முதன்முறையாக பெருமளவில் உதவித்...

2026-08-17 15:56:41
news-image

நல்லூர் கந்தன் நூல்வெளியிடும் யாழ் விருது...

2026-08-17 11:06:55
news-image

அயர்லாந்தில் கராத்தே நூல் வெளியீடு

2026-08-16 17:02:09
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண...

2026-08-16 16:40:38
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம்: சம்பிரதாயப்...

2026-08-16 16:31:53
news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57