ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எவ்வாறு பேச்சுரிமைக்கு எதிரானதாக அமையும் - பிரதி அமைச்சர் எரங்க குணசேகர!

13 Jul, 2026 | 12:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஊழல் மோசடி வழக்கு விசாரணைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எவ்வாறு பேச்சுரிமைக்கு எதிரானதாக அமையும் என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

கொழும்பில்  திங்கட்கிழமை (13) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முடக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது. இதுவரையிலும் அவ்வாறு செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தான் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

ஊழல் மோசடிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தான் எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்று அச்சமடைந்துள்ளார்கள்.

கடந்த காலங்களில் ராஜபக்ஷர்கள் ஆட்சிக்கு வந்தால் ரணில் தரப்பு ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுவார்கள், ரணில் ஆட்சிக்கு வந்தால் ராஜபக்ஷ தரப்பு ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுவார்கள். தற்போது அவ்வாறான சூழல் இல்லாத காரணத்தால் மஹிந்த – ரணில் தரப்பு ஊழல்வாதிகள் ஒன்றிணைந்துள்ளார்கள்.

கூட்டு எதிர்க்கட்சி என்று புதிய கூட்டணியை ஆரம்பித்துள்ளார்கள்.இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் இல்லை. எதிர்;கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரசியலில் மென்மேலும் பலவீனப்படுத்துவதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இந்த கூட்டணியில் முன்னின்று செயற்படுகிறார்.

ஊழல் மோசடியாளர்கள், பிணையில் உள்ளவர்கள், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்கள், மேன்முறையீடு செய்துள்ளவர்கள் தான் கூட்டு எதிர்கட்சியில் உள்ளார்கள். இந்த கூட்டணி அரசாங்கத்துக்கு ஒருபோதும் சவாலாக அமையாது.

ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அதனை பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான செயற்பாடு என்று எவ்வாறு குறிப்பிடுவது. மக்களின் ஜனநாயக உரிமையை நிச்சயம் பாதுகாப்போம்.எதிர்க்கட்சிகளின் போலியான குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் தற்போது கவனம் செலுத்துவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50